'அண்ணே' ரெடி ஜூட்?வட தமிழக அரசியலை புரட்டிப் போட புறப்படும் 'இரண்டு புயல்கள்'-திகுதிகு திமுக, அதிமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: வட தமிழ்நாட்டில் மாஸ் காட்டி வரும் இரு அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி குறித்து எடுக்கப் போகும் திடீர் முடிவுகள்தான் திமுக, அதிமுகவை ரொம்பவே எதிர்பார்ப்புடன் காத்திருக்க வைக்கிறதாம்.

அண்ணா திமுகவுக்கு மேற்கு மண்டலம் எப்படியோ, திமுகவுக்கு வட தமிழ்நாடு தொகுதிகள். தென் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக கலந்தும் செய்த கலவையாகவே இருக்கிறது.

Lok Sabha Election: Northern Tamil Nadu Political Parties ready to Shift Alliance?

அதிமுக ஏக்நாத் ஷிண்டே: அண்ணா திமுகவின் மேற்கு மண்டலத்தை சரி பாதியாக பிரிக்க பாஜக முயன்றது. அதிமுகவில் இருக்கும் 'ஏக்நாத் ஷிண்டே' உதவியுடன் இதை செய்துவிடலாம் என இலவு காத்தது பாஜக. உஷாரான அதிமுக தலைமை உங்க சாவகாசமே வேண்டாம் என பாஜகவை ஒரேயடியாக தூக்கி போட்டுவிட்டது. ஆனாலும் 'ஏக்நாத் ஷிண்டே' இருக்க பயமேன் என்கிற நினைப்பில் இருக்கிறது பாஜக.

குய்யோ முறையோ குமுறல்: இது அதிமுகவின் கதை.. திமுக அணியிலோ ஏற்கனவே இருக்கும் வட தமிழ்நாட்டு சக்திகள் ரொம்பவே குமுறலுடன்தான் குலாவி வந்தனர். வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் கூட்டணி தலைமைக்கு தங்களுக்கே உரித்தான மொழிகளில் குத்திக் காட்டி வந்தனர். ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லையே தவிர அத்தனை வழிகளிலும் அதிருப்தியை கொட்டித் தீர்த்து கொண்டிருந்தனர். போகிறதுக்கு போக்கிடம் இல்லாமல் அமைதி காத்து கிடந்தன ' இரு புயல்' தலைகள்.

வழிபிறந்தது காண்... : என்றைக்கு பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்து உதறி தள்ளியதோ அன்றைக்கே இந்த இரு புயல் அண்ணன்களும் ஏக குஷியாகிவிட்டனராம். ஒரு ஒரு புயல் ஓபன் பிரஸ் மீட்டிலேயே, தொகுதி ஒதுக்கலைன்னா வேற முடிவு என்கிறது. இன்னொரு புயலோ, சுனாமிக்கு முன் அமைதி என்பது போல எத்தனையோ யூகங்கள் முன்வைக்கப்பட்ட போதும் ஆகப் பெரும் அமைதி காக்கிறது. இந்த இரு புயல்களும் போகிற திசைவழி எதுவென்பது யூகிக்கப்பட்டாலும் இப்போதைக்கு திமுகவும் அதிமுகவும் இயல்பாகவே தங்களை காட்டிக் கொள்கின்றன. இந்த இரு புயல்களும் முடிவெடுத்து கரையைக் கடக்கும் போதுதான் தெரியும் அது 'வட தமிழக அரசியலில் ருத்ரதாண்டவம் காட்டும் 'தானே புயலா'? ஒட்டுமொத்தமாக அள்ளிக் கொண்டு போகப் போகிற ஊழிப் பேரலையா? என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள் நமட்டுச் சிரிப்புடன். அண்ணே ஜூட்?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+