Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5 தொகுதிகளில் நாம் தமிழர் 3-ம் இடம்! 12 இடங்களில் 1 லட்சத்துக்கும் மேல் ஓட்டுகள்- தொகுதி வாரியாக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் 5 தொகுதிகளில் 3-வது இடத்தைப் பிடித்திருக்கிறது சீமானின் நாம் தமிழர் கட்சி. 12 தொகுதிகளில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளனர் நாம் தமிழர் வேட்பாளர்கள்.

தமிழ்நாட்டின் 39 லோக்சபா தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தனித்து களம் கண்டனர். இத்தேர்தலில் தொகுதி வாரியாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்:

lok sabha election 2024 seeman 2024

1. மு.ஜெகதீஷ் சந்தர் ( திருவள்ளூர் ) 120838
2. அமுதினி ( வட சென்னை)95954
3. தமிழ்ச்செல்வி ( தென் சென்னை ) 83972
4. இரா.கார்த்திகேயன் ( மத்திய சென்னை ) 46031
5. வெ.ரவிச்சந்திரன் ( திருப்பெரும்புதூர் ) 140233
6. வி.சந்தோஷ்குமார் ( காஞ்சிபுரம் ) 110272
7. அப்சியா நஸ்ரின் ( அரக்கோணம் ) 98944
8. தி.மகேஷ்குமார் ( வேலூர் ) 53284
9. வித்யாராணி வீரப்பன் ( கிருஷ்ணகிரி ) 107083
10. அபிநயா பொன்னிவளவன் ( தர்மபுரி ) 65381
11. இரா.ரமேஷ்பாபு ( திருவண்ணாமலை ) 83869
12. கு.பாக்கியலட்சுமி ( ஆரணி ) 66740
13. மு.களஞ்சியம் ( விழுப்புரம் ) 57242
14. ஆ.ஜெகதீசன் ( கள்ளக்குறிச்சி ) 73652
15. க.மனோஜ் குமார் ( சேலம் ) 76207
16. க.கனிமொழி ( நாமக்கல் ) 95577
17. மு.கார்மேகன் ( ஈரோடு ) 82796
18. மா.கி.சீதாலட்சுமி ( திருப்பூர் ) 95726
19. ஆ.ஜெயக்குமார் ( நீலகிரி ) 58821
20. ம.கலாமணி ஜெகநாதன் ( கோவை ) 82657
21. நா.சுரேஷ்குமார் ( பொள்ளாச்சி ) 58196
22. கயிலை ராஜன் ( திண்டுக்கல் ) 97845
23. ரெ.கருப்பையா ( கரூர்) 87503
24. ஜல்லிக்கட்டு ராஜேஷ் ( திருச்சி ) 107458
25. இரா.தேன்மொழி ( பெரம்பலூர் ) 113092
26. வே.மணிவாசகன் ( கடலூர் ) 57424
27. இரா.ஜான்சிராணி ( சிதம்பரம் ) 65589
28. பி.காளியம்மாள் ( மயிலாடுதுறை ) 127642
29. மு.கார்த்திகா ( நாகப்பட்டினம் ) 131294
30. ஹூமாயூன் கபீர் ( தஞ்சாவூர் ) 120293
31. வி.எழிலரசி ( சிவகங்கை ) 163412
32. மோ.சத்யாதேவி ( மதுரை ) 92879
33. மதன் ஜெயபாலன் ( தேனி ) 76834
34. சி.கவுசிக் ( விருதுநகர் ) 77031
35. சந்திர பிரபா ஜெயபால் ( ராமநாதபுரம் ) 97672
36. ரொவினா ரூத் ஜேன் ( தூத்துக்குடி ) 120300
37. சி.ச.இசை மதி வாணன் ( தென்காசி ) 130335
38. பா.சத்யா ( திருநெல்வேலி ) 87686
39. மரிய ஜெனிபர் ( கன்னியாகுமரி) 52721

5 தொகுதிகளில் 3-வது இடம்: திருச்சி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் ,ஈரோடு ஆகிய 5 தொகுதிகளில் 3-வது இடத்தைப் பிடித்தனர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள். திருச்சியில் அமமுக வேட்பாளர் செந்தில்நாதனை 4-வது இடத்துக்கு தள்ளினார் நாம் தமிழர் கட்சியின் ராஜேஷ். கள்ளக்குறிச்சியில் பாமக வேட்பாளர் தேவதாஸ் ராமசாமியை 4-வது இடத்துக்கு தள்ளினார் நாம் தமிழர் வேட்பாளர் ஜெகதீசன். நாகப்பட்டினத்தில் பாஜக வேட்பாளர் ரமேஷ் கோவிந்தை நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா 4-வது இடத்துக்கு தள்ளினார். கன்னியாகுமரியில் அதிமுக வேட்பாளர் பசிலியான் நாசரேத்தை 4-வது இடத்துக்கு தள்ளிவிட்டார் நாம் தமிழர் கட்சியின் மரிய ஜெனிபர். ஈரோடு தொகுதியில் தமாகாவின் விஜயகுமாரை நாம் தமிழர் கட்சியின் கார்மேகன் 4-வது இடத்துக்கு தள்ளினார்.

1 லட்சம் ஓட்டுகள்: மொத்தம் 12 தொகுதிகளில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பெற்றுள்ளனர். அனைத்து தொகுதிகளிலும் 50,000க்கும் அதிகமான வாக்குகளையே நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பெற்றுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+