அதிமுக கூட்டணியில் வெல்லப்போகும் ஒரே வேட்பாளர் ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத்.. கல்வெட்டு உண்மையாகிடுச்சோ

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Lok Sabha Election Results 2019 : கொங்கு மண்டலத்தில் முன்னிலை வகிக்கும் பாஜக -அதிமுக- வீடியோ

    தேனி: இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் வெல்லப்போகும் ஒரே வேட்பாளர் ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத் என்ற பெருமையை பெரும் வாய்ப்பு உள்ளது

    தேனி மக்களவை தொகுதியில் 3வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார், 69 ஆயிரத்து 126 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

    lok sabha election results 2019 live updates: theni aiadmk candidate ops son raveendhrath may chance to win

    இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 58 ஆயிரத்து 189 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் உள்ளார். இருவருக்கும் இடையே சுமார் 10 ஆயிரத்து 937 வாக்குகள் வித்தியாசம் உள்ளது. இதுவரை வந்த தகவலின் படி அதிமுக கூட்டணியில் வெல்லக்கூடிய நிலையில் துணை முதல்வர் ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத் உள்ளார்.

    அதேநேரம் மற்ற தொகுதி நிலவரங்களை பொறுத்தவரை சிதம்பரம், தருமபுரியில் நிலைமை மாறி மாறி வருகிறது. மற்ற தொகுதிகளில் சொல்லும் படியாக உள்ளது. எனவே நிச்சயம் வெல்லக்கூடிய வாய்ப்பு உள்ள சூழல் என்றால் அது ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு தான்.

    அவரது அப்பா ஓபிஎஸ்சின் வித்தைகள் காரணமாக தமிழகத்தில் திமுக காங்கிரஸ் அலையை மீறி வெற்றி பெறும் சூழல் ரவீந்திரநாத் இருப்பதாக தெரிகிறது.

    ஒருவேளை ரவீந்திரநாத் வெற்றி பெற்றால் தமிழகத்தின் பிரதிநிதித்துவப்படி அமைச்சராகவும் வாய்ப்பு உள்ளது. குச்சனூர் கோயில் கல்வெட்டில் எம்பி என பொறித்தது உண்மையாகிவிடுமோ என்ற சூழலும் இருக்கிறது. எனினும் முழுநிலவரம் வரும் வரை காத்திருப்போம்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+