காங்கிரஸே எதிர்பார்க்காத செம திருப்பம்.. தபால் ஓட்டுக்களில் பாஜகவுக்கு கடும் சவால் தரும் "இந்தியா"

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது தபால் வாக்குகளில் பாஜகவிற்கு காங்கிரஸ் கடும் போட்டி கொடுத்து வருகிறது. இப்போது வெளியாவது தபால் வாக்குகள் என்பதால் உண்மையான முடிவுகள் போக போகவே தெரியும்.

நாடு முழுக்க 543 மக்களவை உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக 2024 ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக பொதுத் தேர்தல்கள் நடந்து முடிந்து உள்ளது. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் இன்று அறிவிக்கப்படும்.

lok sabha election 2024 lok sabha election result 2024 bjp congress 2024 2024 politics

தற்போது தபால் வாக்குகளில் பாஜகவிற்கு காங்கிரஸ் கடும் போட்டி கொடுத்து வருகிறது. இதில் பாஜக என்டிஏ கூட்டணி 213 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக தனியாக 194 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 112 இடங்களில் முன்னிலை வகித்து ஆச்சர்யம் அளித்துள்ளது. காங்கிரஸ் 45 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மொத்தம் 543 தொகுதிகளில் மெஜாரிட்டி பெற 272 தொகுதிகளில் வெல்ல வேண்டும்.

இப்போது வெளியாவது தபால் வாக்குகள் என்பதால் உண்மையான முடிவுகள் போக போகவே தெரியும்.

தேர்தல்: நாடு முழுக்க 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் மூன்று கட்டத் தேர்தலில் முறையே 66.1, 66.7 மற்றும் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 தேர்தலை விட இதுவரை வாக்குப்பதிவு குறைந்துள்ளது. அதன்பின் 4ம் கட்ட தேர்தல் 9 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் நடந்தது. ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 67.25 சதவிகித வாக்குகள் பதிவானது.

தொடர்ந்து 6 மாநிலங்களில் 5ம் கட்ட தேர்தல் நடந்தது. இதில் 60.48% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதன்பின்பான ஆறாவது கட்டத் தேர்தலில் எட்டு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் (UTs) மொத்தம் 889 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 6 ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் தேர்தலை சந்தித்த 58 தொகுதிகளில் தோராயமாக 61.75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி நடந்தது.

தேர்தல் முடிவுகள்:உலக வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப் பெரிய தேர்தல் இது. முந்தைய தேர்தலை விஞ்சி, 44 நாட்கள் நீடிக்கும் நீண்ட தேர்தல் ஆகும். 1951-52 இந்தியப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இவ்வளவு அதிக நாட்கள் ஒரு தேர்தல் நடந்துள்ளது. இரண்டு முறை பிரதமராக இருந்த மோடி தலைமையிலான "மோடி கேரண்டி" கோஷத்துடன் மீண்டும் மூன்றாவது முறையாக தேர்தலை எதிர்கொண்டுள்ளார்.

20க்கும் மேற்பட்ட கூட்டணி கட்சிகள் இணைந்து இந்தியா என்ற மிகப்பெரிய கூட்டணியுடன் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன.

தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். 1.4 பில்லியன் மக்கள்தொகையில் 970 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 70%க்கு சமம். ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தல்களும், 12 சட்டப் பேரவைகளில் உள்ள 25 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் பொதுத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் நடைபெற்று உள்ளன.

2024 தேர்தலுக்கு, 968 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர், இது 2019 தேர்தலை விட சுமார் 150 மில்லியன் வாக்காளர்கள் இந்த முறை அதிகமாகும். அருணாச்சலப் பிரதேசத்தில், அனைத்து குடியிருப்புகளிலிருந்தும் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட வேண்டும் என்று தேர்தல் சட்டத்தின் காரணமாக, மாலோகம் கிராமத்தில் பதிவுசெய்யப்பட்ட ஒரே ஒரு வாக்காளருக்கு ஒரு வாக்குச் சாவடி அமைக்கப்பட்ட விநோதங்கள் கூட இந்த தேர்தல் காலத்தில் நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+