யார் அடுத்த பிரதமர்? தந்தி டிவி கருத்து கணிப்பில் 8-வது முறையாக மோடியை வீழ்த்திய ராகுல் காந்தி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என தந்தி டிவி நடத்திய 8-வது கருத்து கணிப்பிலும் தமிழ்நாட்டு மக்கள் ராகுல் காந்தியையே தேர்வு செய்துள்ளனர். தந்தி டிவி கருத்து கணிப்பில் பிரதமர் மோடி, ராகுல் காந்தியிடம் 8-வது முறையாக தோல்வி அடைந்துள்ளார்.

லோக்சபா தேர்தல் 2024-க்காக கடந்த மே மாதம் முதல் தந்தி டிவி, பிரதமர் மோடி- மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை முன்வைத்து தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் கருத்து கணிப்புகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகிறது.

 Lok Sabha Election: Thanthi TV survey shows Rahul Gandhi Gets 67% support in Tamil Nadu

தமிழ்நாடு வளர்ச்சிக்கு யார் பிரதமராக வர வேண்டும்? சமமான கூட்டாட்சிக்கு யார் பிரதமராக வர வேண்டும்? என்பது உள்ளிட்ட தலைப்புகளில் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதே போல யார் அடுத்த பிரதமராக வர விரும்புகிறீர்கள்..? என்ற தலைப்பில் 2023-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகளை தந்தி டிவி தற்போது வெளியிட்டுள்ளது.

யார் அடுத்த பிரதமராக விரும்புகிறீர்கள்? என்ற தலைப்பில் டிசம்பர் 2023-ல் தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பின் முடிவுகள்:

ராகுல் காந்தி -67%

நரேந்திர மோடி- 27%

மற்றவர்கள்- 6%

நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு யார் பிரதமராக வேண்டும்? என்ற தலைப்பிலான கருத்து கணிப்பு முடிவுகள்:

ராகுல் காந்தி- 68%

பிரதமர் மோடி- 30%

மற்றவர்கள் 2%

தேசத்தின் பாதுகாப்புக்கு யார் பிரதமராக வேண்டும்?

ராகுல் காந்தி 68%

மோடி 32%

உலகில் இந்தியாவின் புகழ் உயர யார் பிரதமராக வேண்டும்?

ராகுல் காந்தி 59%

மோடி 41%

சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மேம்பட யார் பிரதமராக வேண்டும்?

ராகுல் காந்தி 67%

மோடி 30%

இதர 3 %

ஏழை மக்கள் மேம்பாட்டுக்கு யார் பிரதமராக வேண்டும்?

ராகுல் காந்தி 67%

மோடி- 30%

இதர- 3%

கடந்த நவம்பரில் தமிழ்நாடு வளர்ச்சிக்கு யார் பிரதமராக வர வேண்டும்? என்ற தலைப்பில் தந்தி டிவி கருத்து கணிப்பு நடத்தியது. அதில், ராகுல் காந்தி - 69% பிரதமர் மோடி- 26 %; மற்றவர்கள் 5% என தெரிவிக்கப்பட்டிருந்தது. சமமான கூட்டாட்சிக்கு யார் பிரதமராக வர வேண்டும்? என்ற தலைப்பிலான கருத்து கணிப்பில் ராகுல் காந்திக்கு 68%; மோடிக்கு 28% பேர் வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+