மக்களையும், கடவுளையும் நம்புகிறேன்.. நாளை முதல் பிரச்சாரம் செய்கிறேன்… பவர்ஸ்டார் சீனிவாசன்
சென்னை: மக்களையும், கடவுளையும் நம்பி தேர்தலில் போட்டியிடுகிறேன் என நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தென்சென்னை தொகுதியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் களமிறங்குகிறார். அவருக்கு அயன் பாக்ஸ் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசியல் களம் அனல் பறந்து வரும் நிலையில், நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக, நடிகர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். அக்குபஞ்சர் மருத்துவரான பவர் ஸ்டார் சீனிவாசன், சினிமாவில் கால் பதித்து, தற்போது அரசியலில் நுழைந்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர் கூறியதாவது, தேர்தல் கருத்துக்கணிப்புகளில் என் பெயரை சஸ்பென்சாக வைத்துள்ளனர். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. கண்டிப்பாக நான் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
வேட்பாளராக நிற்க வந்த வாய்ப்பை பயன்படுத்துக் கொண்டேன், செலவு எல்லாம் கட்சியில் பார்த்து கொள்கிறார்கள். எந்த செலவும் என்னது இல்லை. எல்லாமே கட்சி தான் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். கட்சியின் தேர்தல் அறிக்கையை வைத்து என்னுடைய பிரச்சார உரை இருக்கும் என்றும் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தென்சென்னை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் ஜெ.ஜெயவர்தனும், திமுக கூட்டணி சார்பில் தமிழச்சி தங்கபாண்டியனும், அமமுக சார்பில் இசக்கி சுப்பையாவும், மக்கள் நீதி மய்யம் சார்பில் ரங்கராஜனும், நாம் தமிழர் கட்சி சார்பில் ஷெரினும் போட்டியிடுகின்றனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications