தேர்தல்.. தமிழகத்தில் எங்கு அதிக பேர் போட்டி.. எத்தனை பெண்கள் போட்டி.. ஆச்சர்ய புள்ளிவிவரம்!
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் தற்போது தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டு இருக்கிறது.
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் தற்போது தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டு இருக்கிறது.
தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலுக்கு தமிழகம் மிக வேகமாக தயாராகிவிட்டது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.39 மக்களவைத் தொகுதிகளில் 1596 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
இதில் 9 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். மீதமுள்ளதில் 845 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. 742 பேரின் வேட்பு மனுக்களை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது.

பாலினம் எப்படி
தமிழகத்தில் இரண்டு தேர்தலுக்கும் சேர்த்து ஆண்கள் 1414 பேரும், பெண்கள் 171 பேரும், திருநங்கை 2 பேரும், வேட்புமனுத்தாக்கல் செய்தனர். இதில் ஆண்கள் 779 பேரும், பெண்கள் 69 பேரும், திருநங்கை ஒருவரும் போட்டியிட தகுதி பெற்றுள்ளனர்.

எங்கு அதிகம்
அதிகமாக லோக்சபா தேர்தலில் காஞ்சிபுரம் மற்றும் மத்திய சென்னையில் 11 பேர் போட்டியிடுகின்றனர். தென்சென்னையில் 40 பேர் போட்டியிடுகின்றனர். கரூரில் அதிகபட்சமாக 42 பேர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எத்தனை பேர்
அதேபோல் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடவும் நிறைய பேர் ஆர்வம் தெரிவித்து இருக்கிறார்கள். 18 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் 269 பேர் போட்டியிடுகிறார்கள். இரண்டிலுமே ஆண்கள்தான் அதிகமாக போட்டியிடுகிறார்கள்.

சூப்பர்
இந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் மாநில கட்சிகள் சார்பில் 36 பேர் போட்டியிடுகிறார்கள். இதர கட்சிகள் சார்பில் 46 பேர் போட்டியிடுகிறார்கள். அதேசமயம் சுயேட்சைகள் 187 பேரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications