சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்திற்கு ரூ.5,010 கோடியில் சாலை திட்டங்கள்… பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ரூபாய் 5,010 கோடியில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கிளாம்பாக்கம் வந்தடைந்தார். அங்கு முதலில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் ரூபாய் 5,150 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள எண்ணூர் திரவ எரிவாயு முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

Lok Sabha Elections 2019: Prime Minister Modi Participates in the grand Vandaloor Public meeting

மேலும், தமிழகத்தில் ரூ. 5, 010 கோடியில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். காணொலி காட்சி மூலம் 4 தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் .

இதனைத் தொடர்ந்து, வேலூர், திருவண்ணாமலை விழுப்புரம் மாவட்டங்களில் 2 வழிச்சாலை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 32 கிலோ மீட்டர் தூர நான்குவழிச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.

வாட்ஸ் ஆப் குரூப் ஆரம்பித்த ப.சிதம்பரம்.. அட்மினாக மருமகள் நியமனம்.. சிவகங்கையில் போட்டியா?வாட்ஸ் ஆப் குரூப் ஆரம்பித்த ப.சிதம்பரம்.. அட்மினாக மருமகள் நியமனம்.. சிவகங்கையில் போட்டியா?

இதே போல், ஈரோடு - கரூர் -திருச்சி மற்றும் சேலம்- கரூர் -திண்டுக்கல் மின்மயமாக்கல் ரயில் பாதை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி. இதுதவிர சென்னை அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் சிலையையும் அவர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

English summary
Rs. 5,010 crores road projects For Tamilnadu; Prime Minister Modi laid the foundation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X