நிறைய கஷ்டப்பட்டோம்.. பின்லேடனுக்கு கூட இவ்வளவு நெருக்கடி வந்ததில்லை.. கார்த்தி சிதம்பரம் பகீர்!
பின்லேடனுக்கு கூட இவ்வளவு நெருக்கடி வந்தது கிடையாது எனக்கு அதைவிட அதிக நெருக்கடி தந்தனர் என்று காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் பேட்டியளித்துள்ளார்.
சிவகங்கை: பின்லேடனுக்கு கூட இவ்வளவு நெருக்கடி வந்தது கிடையாது எனக்கு அதைவிட அதிக நெருக்கடி தந்தனர் என்று காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் பேட்டியளித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பாக கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். இவர் பாஜக தேசிய செயலாளர் வேட்பாளர் எச்.ராஜாவை எதிர்த்து போட்டியிடுகிறார். நேற்றுதான் இதற்கான அறிவிப்பு வெளியானது.

மிகுந்த இழுபறிக்கு பின் சிவகங்கை வேட்பாளர் குறித்த இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இன்றுதான் கார்த்தி சிதம்பரம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து தற்போது முதல்முறையாக அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
இதுகுறித்து பேட்டி அளித்த கார்த்தி சிதம்பரம், தேர்தலில் முடிந்தவரை அனைத்து இடங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்வான். மக்களுக்கும் எனக்கும் இங்கு நெருங்கிய உறவு இருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் முடிந்த அளவு மக்களை சந்திப்பேன்.
ஆனால் அனைத்து இடங்களுக்கும் குறைந்த நாளில் செல்வது கடினம். சூப்பர்மேனால் கூட அனைத்து வாக்காளர்களையும் நேரில் சந்திக்க முடியாது.
எங்கள் குடும்பம் மீது வரிசையாக வழக்குகளை போட்டு வருகிறார்கள். மக்களுக்கு தெரியும், அது எல்லாமே பொய் வழக்குகள் என்று. அது விரைவில் நிரூபணம் ஆகும். எங்கள் குடும்பத்தை போல எந்த குடும்பமும் பொய் வழக்கை சந்தித்ததில்லை.
நிறைய கஷ்டப்பட்டோம். எங்களுக்கு அவ்வளவு நெருக்கடிகளை தந்து இருக்கிறார்கள். பின்லேடனுக்கு கூட இவ்வளவு நெருக்கடி வந்தது கிடையாது; எனக்கு அவ்வளவு நெருக்கடி தந்தனர்.
சிவகங்கையில் புதிய நிறுவனங்கள் தொடங்கப்படும். முதலீட்டை அதிகரித்து, சிவகங்கை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும்., என்று கார்த்தி சிதம்பரம் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications