தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக மலருது தாமரை.. ஒன்றல்ல.. 6 இடங்களில் பாஜகவிற்கு சான்ஸாமே.. டைம்ஸ் நவ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 2-6 இடங்களில் பாஜக வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக லோக்சபா தேர்தல் 2024 தொடர்பாக டைம்ஸ் நவ் இடிஜி எடுத்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில், வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும், அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

Lok sabha Prediction survey BJP can win upto 6 seats in Tamil nadu says Times Now ETG survey

இன்று மட்டுமே தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய முடியும். இதனால் கடைசி கட்ட பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கின்றன. இன்று மாலையோடு பிரச்சாரங்கள் நிறைவு பெறுகின்றன.

கருத்து கணிப்பு: லோக்சபா தேர்தல் களம் நாடு முழுக்க சூடு பிடித்துள்ளது. லோக்சபா தேர்தல் பிரச்சாரங்கள் நாடு முழுக்க தீவிரமாக நடந்து வருகின்றது. இது தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் லோக்சபா தேர்தல் தொடர்பாக டைம்ஸ் நவ் - இடிஜி கருத்து கணிப்புகளை மேற்கொண்டு உள்ளன.

டைம்ஸ் நவ் - இடிஜி கருத்துக்கணிப்பின்படி, இந்தியாவில் மீண்டும் பாஜகதான் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு (மொத்த இடங்கள்: 39)

- திமுக (யுபிஏ): 26% வாக்கு சதவிகிதம் பெறும்
- காங்கிரஸ்: 18% வாக்கு சதவிகிதம் பெறும்
- அதிமுக: 17% வாக்கு சதவிகிதம் பெறும்
- பாஜக: 19% வாக்கு சதவிகிதம் பெறும்
- மற்றவை: 20% வாக்கு சதவிகிதம் பெறும்

தமிழ்நாடு (மொத்த இடங்கள்: 39) || கட்சி ரீதியாக வெற்றி வாய்ப்பு உள்ள இடங்கள்

- திமுக: 20-21 இடங்களை வெல்லும் வாய்ப்பு
- காங்கிரஸ்: 5-7 இடங்களை வெல்லும் வாய்ப்பு
- அதிமுக: 1-3 இடங்களை வெல்லும் வாய்ப்பு
- பாஜக: 2-6 இடங்களை வெல்லும் வாய்ப்பு
- மற்றவை: 5-7 இடங்களை வெல்லும் வாய்ப்பு

கூட்டணி ரீதியாக வெற்றி வாய்ப்பு உள்ள இடங்கள்

- திமுக கூட்டணி: 31-33 இடங்களை வெல்லும் வாய்ப்பு உள்ளது
- அதிமுக கூட்டணி: 2-6 இடங்களை வெல்லும் வாய்ப்பு உள்ளது
- பாஜக கூட்டணி: 1-3 இடங்களை வெல்லும் வாய்ப்பு உள்ளது

தமிழ்நாட்டில் திமுக மீண்டும் வெற்றிபெறும். ஆனால் முன்பு வென்ற 38 இடங்களை வெல்லாது. மாறாக 7 இடங்கள் வரை குறைவாக வெல்லும் வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம் தமிழ்நாட்டில் 2-6 இடங்களில் பாஜக வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக லோக்சபா தேர்தல் 2024 தொடர்பாக டைம்ஸ் நவ் இடிஜி எடுத்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் மத்தியில் ஆட்சி அமைக்க போவது யார்? (ஒட்டுமொத்த மொத்த இடங்கள்: 543) | மெஜாரிட்டி 272

பாஜக கூட்டணி : 366-406
இந்தியா கூட்டணி: 108-128
திமுக 20-21
ஒய்எஸ்ஆர்பி:19-20
பிஜேடி:10-12
மற்றவை: 7-9

பாஜக மீண்டும் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+