தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி 5ல் வெல்லும்! அதிமுகவை விட ஒன்னு ஜாஸ்தியாம்! அப்போ திமுக? அசரவைத்த சர்வே
சென்னை: தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி அதிமுக கூட்டணியை விட 1 இடத்தில் கூடுதலாக வெல்லும் என்று இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
லோக்சபா தேர்தல் தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. இந்த சர்வேக்கள் பல்வேறு அதிர்ச்சி தரும் சுவாரசியமான விஷயங்களை வெளியிட்டு வருகின்றன.

உதாரணமாக லோக்சபா தேர்தலில் அதிமுகவை விட பாஜக அதிக வாக்கு வங்கியை பெறும் என்று டைம்ஸ் நவ் நடத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
லோக்சபா தேர்தல் தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. இந்த சர்வேக்கள் பல்வேறு அதிர்ச்சி தரும் சுவாரசியமான விஷயங்களை வெளியிட்டு வருகின்றன. டைம்ஸ் நவ் - மேட்ரைஸ் என்சி இது தொடர்பாக கருத்து கணிப்புகளை மேற்கொண்டு உள்ளன.
மொத்தமாக ரிசல்ட் என்ன: மக்களவையின் ஒட்டுமொத்த கணிப்பு:
மொத்த இடங்கள்: 543
பாஜக கூட்டணி: 366
இந்தியா கூட்டணி: 104
மற்றவை: 73
மீண்டும் பாஜக ஆட்சி: இதன் மூலம் பாஜக மீண்டும் முழு பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. 3வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
லோக்சபா தேர்தல் கணிப்பு; அதுபோக தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்றும் கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. . தமிழ்நாடு (மொத்த இடங்கள்- 39): லோக்சபா தொகுதி கணிப்புகள் இதோ:
- பாஜக: 1
- திமுகவின் இந்தியா கூட்டணி - 36
- அதிமுக: 2
- மற்றவை: 0
தமிழ்நாட்டில் தோல்வி: அதே சமயம் தமிழ்நாட்டில் பாஜக படுதோல்வி அடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு (மொத்த இடங்கள்- 39): லோக்சபா தொகுதி கணிப்புகள் படி பாஜக: 1 இடத்தில் மட்டுமே வெல்லும். திமுகவின் இந்தியா கூட்டணி - 36 இடங்களில் வெல்லும். 39 இடங்களில் இருந்து 3 இடங்களை திமுக இழக்கும் என்றாலும், பெரும்பான்மை இடங்களில் திமுகவே வெல்லும். அதிமுக: 2 இடங்களில் வெல்லும். கடந்த முறை ஒரு தொகுதியில் வென்ற அதிமுக இந்த முறை 2 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது
இந்தியா டிவி-சிஎன்எக்ஸ்: இந்த நிலையில் தற்போது இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் இது தொடர்பாக கருத்து கணிப்புகளை மேற்கொண்டு உள்ளன.
அதன்படி இப்போது தேர்தல் நடந்தால் தென்னிந்தியாவில் மொத்தமுள்ள 130 மக்களவைத் தொகுதிகளில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி 60 இடங்களையும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக என்டிஏ 38 இடங்களை வெல்லக்கூடும் .
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம், அதிமுக, பிஆர்எஸ், ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட மற்ற கட்சிகள் மீதமுள்ள 32 இடங்களில் வெற்றி பெறலாம் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு: திமுக ஆளும் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுகவின் இந்திய கூட்டணி 30 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 5 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் வெற்றிபெறலாம் என சர்வே கணித்துள்ளது.
கட்சி வாரியாக, திமுக 20 இடங்களிலும், அதிமுக மற்றும் பாஜக தலா 4 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும், பாமக ஒரு இடத்திலும், மற்றவர்கள் 4 இடங்களிலும் வெற்றி பெறலாம்.
மண்டல வாரியான கணிப்புகள்:: சென்னை மொத்தம் 6 (திமுக கூட்டணி 5, அதிமுக 1), வட தமிழகம் மொத்தம் 7 (திமுக 6, என்.டி.ஏ. 1), மேற்கு தமிழ்நாடு மொத்தம் 9 (திமுக 6, என்.டி.ஏ. 2, அதிமுக 1), தென் தமிழ்நாடு மொத்தம் 10 (திமுக 7, தே.மு.தி.க. 2, அதிமுக 1), காவிரி டெல்டா மொத்தம் 7 (திமுக 6, அதிமுக 1).
தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ-எம், விசிகே, ஐயுஎம்எல் மற்றும் பிற சிறிய கட்சிகளை உள்ளடக்கியது இந்தியா கூட்டணி.
புதுச்சேரி: அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவுடன் புதுச்சேரியில் உள்ள ஒரே லோக்சபா தொகுதியில் பாஜக வெல்லும் என சர்வே கூறுகிறது.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications