தமிழ்நாட்டில் மலரும் தாமரை? பாஜகவின் எதிர்காலத்தை மாற்றும் 8 தொகுதிகள்! அடடா அசையுதே! தந்தி சர்வே
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 8 தொகுதிகளில் பாஜக கூட்டணி அதிக அளவு வாக்குகளை பெறும் என்று தந்தி டிவி சர்வேயில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக 20 சதவிகித வாக்குகளை வெல்லும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில், வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும், அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இன்று மட்டுமே தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய முடியும். இதனால் கடைசி கட்ட பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கின்றன. இன்று மாலையோடு பிரச்சாரங்கள் நிறைவு பெறுகின்றன.
கருத்து கணிப்பு: லோக்சபா தேர்தல் களம் நாடு முழுக்க சூடு பிடித்துள்ளது. லோக்சபா தேர்தல் பிரச்சாரங்கள் நாடு முழுக்க தீவிரமாக நடந்து வருகின்றது. இது தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் லோக்சபா தேர்தல் தொடர்பாக தந்தி டிவி மேற்கொண்டு உள்ளன.
மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும்.
அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது.
பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும்.
இழுபறி நீடிக்கும் இடங்கள் 5
வாக்கு சதவிகிதம்:
திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.
அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.
பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.
நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்
பாஜக வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதி : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 8 தொகுதிகளில் பாஜக கூட்டணி அதிக அளவு வாக்குகளை பெறும் என்று தந்தி டிவி சர்வேயில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக 20 சதவிகித வாக்குகளை வெல்லும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி
தருமபுரியில் பாஜக 20 சதவிகித வாக்குகளை வெல்லும்
தென் சென்னையில் பாஜக 20 சதவிகித வாக்குகளை வெல்லும்
கன்னியாகுமரியில் பாஜக 20 சதவிகித வாக்குகளை வெல்லும்
வேலூரில் பாஜக 20 சதவிகித வாக்குகளை வெல்லும்
தேனியில் பாஜக 20 சதவிகித வாக்குகளை வெல்லும்
திருநெல்வேலியில் பாஜக 20 சதவிகித வாக்குகளை வெல்லும்
கோயம்புத்தூரில் பாஜக 20 சதவிகித வாக்குகளை வெல்லும்
ராமநாதபுரமில் பாஜக 20 சதவிகித வாக்குகளை வெல்லும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications