தேசிய அளவில் கலக்கல்.. மீண்டும் 3வது பெரிய கட்சியாக உருவெடுக்கும் திமுக.. சர்வே சொன்ன சர்ப்ரைஸ்
சென்னை: தேசிய அளவில் லோக்சபாவில் 3வது பெரிய கட்சியாக திமுக உருவெடுக்கும் என்று டைம்ஸ் நவ் இடிஜி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
லோக்சபா தேர்தல் களம் நாடு முழுக்க சூடு பிடித்துள்ளது. லோக்சபா தேர்தல் பிரச்சாரங்கள் நாடு முழுக்க தீவிரமாக நடந்து வருகின்றது. இது தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் லோக்சபா தேர்தல் தொடர்பாக டைம்ஸ் நவ் - இடிஜி கருத்து கணிப்புகளை மேற்கொண்டு உள்ளன.

டைம்ஸ் நவ் - இடிஜி கருத்துக்கணிப்பின்படி, இந்தியாவில் மீண்டும் பாஜகதான் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.
மொத்தமான ரிசல்ட்: மொத்தமாக லோக்சபா தேர்தலில் ,
மொத்த இடங்கள்: 543) || மெஜாரிட்டி 272
- பாஜக: 329-359
- காங்கிரஸ்: 27-47
- YSRCP: 21-22
- திமுக: 21-22
- டிஎம்சி: 17-21
- BJD: 10-12
- ஆம் ஆத்மி: 5-7
- மற்றவை: 72-92
என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு நிலவரம்: தமிழகத்தில் மொத்தம் 39 இடங்கள் உள்ளன. வரும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க 21- 22 இடங்களைப் பிடிக்கும். அதாவது திமுகவின் சின்னம் மட்டும் 22 இடங்கள் வரை வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
திமுக சின்னம் போட்டியிடுவதே 21 சின்னம்தான். அதே நேரத்தில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 5 முதல் 7 இடங்களைப் பிடிக்கும் என்று இந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், 2019-ல் தமிழ்நாட்டில் தனது கணக்கைத் திறக்கத் தவறிய பா.ஜ.க
தேர்தல்களில் இரண்டு முதல் ஆறு இடங்களை பிடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் கணிப்பில். பாஜகவின் முன்னாள் கூட்டணி கட்சியான அதிமுக ஒன்று முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக இல்லாமல் மற்றவர்கள் நான்கிலிருந்து ஐந்து இடங்களைப் பெறலாம். அதாவது இந்த மற்ற கட்சிகள் திமுக கூட்டணியில் தனி சின்னத்தில் போட்டியிடும் விசிக போன்ற கட்சிகளோ, அதிமுக கூட்டணியில் தனி சின்னத்தில் நிற்கும் தேமுதிக போன்ற கட்சிகளா என்ற கேள்வி எழுந்துள்ளது.
3வது பெரிய கட்சி: தேசிய அளவில் லோக்சபாவில் 3வது பெரிய கட்சியாக திமுக உருவெடுக்கும் என்று டைம்ஸ் நவ் இடிஜி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக 303 இடங்கள், காங்கிரஸ் 52, திமுக 24, திரிணாமூல் காங்கிரஸ் 22 இடங்களை வென்றது. இதன் மூலம் திமுக 3வது பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் இருந்தது.
இந்த முறை மொத்த இடங்கள்: 543) || மெஜாரிட்டி 272
- பாஜக: 329-359
- காங்கிரஸ்: 27-47
- திமுக: 21-22
- டிஎம்சி: 17-21
என்று கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. இதனால் கடந்த முறையை போலவே மீண்டும் தேசிய அளவில் லோக்சபாவில் 3வது பெரிய கட்சியாக திமுக உருவெடுக்கும் என்று டைம்ஸ் நவ் இடிஜி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications