200 இடங்களை தாண்டாது! பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்காது.. அடித்து சொல்லும் திமுக.. எப்படி?
சென்னை: தேசிய அளவில் எடுக்கப்படும் பல்வேறு தேர்தல் கணிப்புகளில் பாஜகவிற்கு 350க்கு மேல் இடங்கள் கிடைத்து மெஜாரிட்டி கிடைக்கும் என்று கூறப்படும் நிலையில், பாஜக 200 இடங்களுக்கு மேல் ஜெயிக்க வாய்ப்பில்லை என்று திமுக தரப்பு உறுதியாக தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் களம் நாடு முழுக்க சூடு பிடித்துள்ளது. லோக்சபா தேர்தல் பிரச்சாரங்கள் நாடு முழுக்க தீவிரமாக நடந்து வருகின்றது. இது தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் லோக்சபா தேர்தல் தொடர்பாக டைம்ஸ் நவ் - இடிஜி கருத்து கணிப்புகளை மேற்கொண்டு உள்ளன.

டைம்ஸ் நவ் - இடிஜி கருத்துக்கணிப்பின்படி, இந்தியாவில் மீண்டும் பாஜகதான் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.
மொத்தமான ரிசல்ட்: மொத்தமாக லோக்சபா தேர்தலில் ,
மொத்த இடங்கள்: 543) || மெஜாரிட்டி 272
- பாஜக: 329-359
- காங்கிரஸ்: 27-47
- YSRCP: 21-22
- திமுக: 24-28
- டிஎம்சி: 17-21
- BJD: 10-12
- ஆம் ஆத்மி: 5-7
- மற்றவை: 72-92
என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாஜக இலக்கு; பாரதிய ஜனதா கட்சி (BJP) 2024 லோக்சபா தேர்தலில் 370 இடங்களை வெல்வதை லட்சிய இலக்காக நிர்ணயித்துள்ளது. 2019 ஐ விட 67 இடங்கள் அதிகம் வெல்வோம் என்று பாஜக தலைவர்கள் மேடைக்கு மேடை அறிவித்து வருகின்றனர். ஆனால் பாஜகவால் இந்த இலக்கை அடைய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேசிய அளவில் எடுக்கப்படும் பல்வேறு தேர்தல் கணிப்புகளில் பாஜகவிற்கு 350க்கு மேல் இடங்கள் கிடைத்து மெஜாரிட்டி கிடைக்கும் என்று கூறப்படும் நிலையில், பாஜக 200 இடங்களுக்கு மேல் ஜெயிக்க வாய்ப்பில்லை என்று திமுக தரப்பு உறுதியாக தெரிவித்துள்ளது. திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் செய்துள்ள போஸ்டில், நாம் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டிய முக்கிய செய்தி ,பாஜக 200 இடங்களுக்கு மேல் ஜெயிக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார் .
காங்கிரஸ் உள் சர்வே: இன்னொரு பக்கம் பாஜக மெஜாரிட்டி பெறாது, 180 இடங்களுக்கு குறைவாகவே பெறும் என்று காங்கிரஸ் நடத்திய லோக்சபா தேர்தல் இன்டர்னல் சர்வேயில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாம். லோக்சபாவில் உள்ள மொத்த இடங்கள்: 543, இதில் மெஜாரிட்டி பெற 272 இடங்களில் வெல்ல வேண்டும்.
லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (BJP) 2024 லோக்சபா தேர்தலில் 370 இடங்களை வெல்வதை லட்சிய இலக்காக நிர்ணயித்துள்ளது. 2019 ஐ விட 67 இடங்கள் அதிகம் வெல்வோம் என்று பாஜக தலைவர்கள் மேடைக்கு மேடை அறிவித்து வருகின்றனர். ஆனால் பாஜகவால் இந்த இலக்கை அடைய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜக தனியாக 370 இடங்களை வெல்வதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) 400 ரன்களை கடக்க வாய்ப்பாக அமையும் என்பதால் பாஜக இந்த மாபெரும் இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. . மக்களவையில் 543 இடங்கள் உள்ளன, பாஜக 2014 மற்றும் 2019 இல் முறையே 282 மற்றும் 303 இடங்களை வென்றது.
370 என்ற இலக்கை.. ஜம்மு காஷ்மீரின் 370 நீக்கத்துடன் பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவினர் இணைத்து பேசி வருகின்றனர்.ஆனால் கடந்த முறை வென்றதில் இருந்து கூடுதலாக 67 இடங்களை சேர்ப்பது என்பது பாஜகவிற்கு மிகவும் கடினமான பணியாக இருக்கலாம்.
காங்கிரஸ் சொல்லும் நம்பர்: பாஜக இவ்வளவு பெரிய இலக்கை வைத்திருக்க காங்கிரஸ் கட்சியோ பாஜகவிக்கு தனியாக 180 இடங்கள்தான் கிடைக்கும். அதை கிராஸ் செய்யவே முடியாது என்கின்றனர். காங்கிரஸ் தலைவர்கள் பலர் நேரடியாக களத்திலேயே இந்த நம்பரை தீவிரமாக குறிப்பிட்டு வருகின்றனர்.
ஆனால் காங்கிரஸ் இப்படி பேசுவது வெறும் பிரச்சாரம் அல்ல வெறுமனே பேச்சு கிடையாது, மாறாக இதற்கு பின் வேறு சில விஷயங்கள் உள்ளன என்று காங்கிரஸ் தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. இன்டர்னல் சர்வே, பல்வேறு உள் ஆய்வுகள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களின் ஆய்வுகள் அடிப்படையில்தான் இந்த நம்பரை கண்டுபிடித்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
காங்கிரஸ் வெறுமனே இப்படி பேசவில்லை இன்டர்னல் சர்வேவிற்கு பின்பே காங்கிரஸ் இப்படி பிரச்சாரத்தில் பேசி வருகிறதாம்.
எதிர்க்கட்சி தலைவர்கள் கைது , எம்பிக்கள் கைது, அடுத்தடுத்து அமலாக்கத்துறை ரெய்டு, கச்சத்தீவு விஷயத்தை திடீரென பேசியது போன்ற விஷயங்கள் கூட பாஜகவின் பயம் காரணமாகவே. அவர்களுக்கே குறைவான இடத்தில் வெல்வோம் என்று தெரியும். அதனால்தான் இப்படி மாநில முதல்வர்களை கூட கைது செய்யும் நிலைக்கு சென்றுள்ளனர். பாஜக நம்பிக்கையின்றி இருக்கிறது. அதனால்தான் இப்படி செய்கிறது என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜக 180 இடங்களை தாண்டாது. அதனால்தான் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், ஒடிசாவில் எப்படியாவது வெல்ல முடியுமா, வெல்லும் இடங்களை அதிகரிக்க முடியுமா என்று பாஜக தீவிரமாக முயன்று வருகிறது என்று காங்கிரஸ் எடுத்த இன்டர்னல் சர்வேயில் கூறப்பட்டு உள்ளதாம்.
பாஜகவிற்கு இலக்கு கஷ்டம்; பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பெரும்பாலான பாஜக ஆதரவாளர்கள் ஆய்வாளர்கள் தெரிவித்தாலும், 370 இடங்கள் என்பது அக்கட்சிக்கு மிகவும் கடினமான ஒன்றாகும். 2019ல் பாஜக வெற்றி பெற்ற மாநிலங்களில் எல்லாம் அதே மாதிரி வெற்றியை மீண்டும் பாஜக பதிவு செய்ய வேண்டும்.
கடந்த முறை குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்ற இடங்களிலும் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். அதோடு இல்லாமல் புதிதாக 67 இடங்களை வெல்ல வேண்டும். கடந்த முறை வென்ற இடங்களில் சில தொகுதிகளை இழக்கும் பட்சத்தில் கூடுதலாக புதிய இடங்களில் வெல்ல வேண்டும்.
தற்போது லோக்சபா தேர்தலில் பாஜக 443 மக்களவைத் தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 100 இடங்களிலும் போட்டியிடுகிறது. இதில் தென்னிந்தியாவில் மட்டும் பாஜக சின்னங்கள் பின்வரும் தொகுதிகளில் போட்டியிடுகின்றன,
தமிழ்நாடு - 19
கேரளா - 18
தெலுங்கானா - 13
ஆந்திரா - 06
பஞ்சாப் - 13
உத்தரகாண்ட்- 02
வடகிழக்கு- 02
மேற்கு வங்கம்- 16
பாஜகவின் இந்த 90 தொகுதிகளில்தான் பாஜகவிற்கு கடுமையான போட்டியே நிலவும். இதில் கர்நாடக தவிர மற்ற இடங்களில் பாஜகவிற்கு அவ்வளவு சாதகமான சூழ்நிலை இல்லை. இந்த 90ல் பாஜக 20- 25 இடங்களில் வென்றால் கூட மீதமுள்ள 373 இடங்களில் அப்படியே பாஜக தனியாக வெல்வது என்பதற்கு நம்பர்ஸ் ரீதியாக வாய்ப்பு குறைவு.அதனால் இந்த முறை பாஜக நினைத்த இலக்கை அடையுமா அல்லது காங்கிரசின் உள் சர்வே போல பாஜக தோற்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications