Flash Back:அதிமுகவிடம் மீண்டும் திணறும் பாஜக-வாஜ்பாயை கதிகலங்க வைத்த ஜெயலலிதா..மறக்க முடியுமா?
சென்னை: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது அதிமுக எப்படியாவது ஒருங்கிணைந்துவிடாதா? என தவியாய் தவிக்கிறது பாஜக. அதிமுகவிடம் மீண்டும் மீண்டும் பாஜக சிக்கி திணறுவது ஒன்றும் புதியதும் அல்ல.. வாஜ்பாய், அத்வானி என பாஜக தலைவர்களை கதிகலங்க வைத்து ஒற்றை ஓட்டில் பாஜக அரசாங்கத்தையே ஜெயலலிதா கவிழ்த்த வரலாறும் மறக்கக் கூடியதும் அல்ல.
அதிமுகவானது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் என 4 அணிகளாக சிதறிப் போய் இருக்கிறது. 2024 லோக்சபா தேர்தலில் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற பெருநம்பிக்கையுடன் பாஜக இருக்கிறது.. ஆனால் தமிழகத்தை நினைத்தாலே பாஜகவுக்கு கலக்கம் வரத்தான் செய்யும்.
இப்படி சின்னாபின்னமாக சிதறிக் கிடக்கிற அதிமுகவை எப்படியாவது ஒரு சேரவைத்து சிந்தாமல் சிதறாமல் அறுவடையை சாதித்தாக வேண்டும் என்கிற முனைப்பு டெல்லி பாஜக தலைவர்களிடம் இருக்கிறது. மதுரையில் ஓபிஎஸ், இபிஎஸ் கைகளை பிரதமர் மோடி கோர்த்து வைத்ததன் அர்த்தமும் எது என்பதை தமிழகமும் அரசியல் களமும் நன்கு அறியும்.

1996-ல் தமிழக நிலவரம்
மத்தியில் காங்கிரஸ் கட்சியின் ஒற்றையாட்சி சகாப்தம் முடிவுக்கு வந்து மாநில கட்சிகளின் கூட்டணிகள் தலையெடுத்த காலத்தில் பாஜகவும் காங்கிரஸுக்கு மாற்றாக விருட்சமாக விஸ்வரூபம் எடுத்து கொண்டிருந்தது. 1996 தமிழக சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ஆட்சி தூக்கி எறியப்பட்டு திமுக அரியணை ஏறியது. ஜெயலலிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு மீண்ட காலம். தமிழகத்தில் காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் என கூறுபட்டு இருந்த சூழல்..

1996 லோக்சபா தேர்தலும் ஆட்சி கவிழ்ப்புகளும்
1996 லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றது. அதனால் அப்போதைய ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா, வாஜ்பாயை பிரதமராக பதவியேற்க அழைத்தார். ஆனால் வாஜ்பாய் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் 13 நாட்கள் ஆட்சியில் இருந்து விலகினார். பின்னர் தேவகவுடா, ஐகே குஜ்ரால் என அடுத்தடுத்த பிரதமர்கள் குறுகிய காலம் பதவி வகித்தனர். இந்த கூட்டணி ஆட்சி தாக்கு பிடிக்காமல் கலைந்து போனதால் 2 ஆண்டுகளில் 1998 லோக்சபா தேர்தல் நடைபெற்றது.

1998-ல் பாஜக- அதிமுக கூட்டணி
1998-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக இடம்பெற்றது. அப்போதுதான் கோவை குண்டுவெடிப்பு சம்பவமும் நடந்தது. அந்த தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி 30 இடங்களை அள்ளியது; திமுக கூட்டணிக்கு 18 இடங்கள்தான் கிடைத்தன. பாஜகவின் நம்பிக்கைக்குரிய தோழமை கட்சியாக அதிமுக இருந்தது. இன்னமும் சொல்லப்போனால் பாஜகவின் இயல்பான கூட்டணி கட்சியாக அதிமுக இருந்தது. ராமர் கோவில் விவகாரம் தொடங்கி அத்தனை இந்துத்துவா கோட்பாடுகளையும் முழுவீச்சில் ஆதரித்தவர் ஜெயலலிதா என்பதால் இந்த கூட்டணி நம்பத்தகுந்த ஒன்றாக இருந்தது.

வாஜ்பாயின் துயரமான 14 மாதங்கள்
ஆனால் காலம் விசித்திரமானது அல்லவா? 14 மாதங்கள்தான் அதிமுக தயவில் பாஜகவின் நிறுவனத் தலைவரான வாஜ்பாய் பிரதமராக இருந்தார். அந்த 14 மாதங்கள் குறித்து வாஜ்பாய் இப்படித்தான் குறிப்பிட்டிருந்தார்.. " 14 மாதங்கள் என் அரசியல் வாழ்வின் முக்கியமானவை.. 14 மாதங்களில் அனுபவித்த துன்பங்கள் எமர்ஜென்சி காலத்து சிறைவாசத்தின்போது கூட அனுபவித்தது இல்லை. ஒவ்வொரு நாளும் படுக்க செல்லும் போது காலையில் அரசு இருக்குமா? என தெரியாத நிலையில்தான் இருந்தேன் என வேதனையை கொட்டி இருந்தார் வாஜ்பாய்.

ஜெயலலிதாவின் ஆட்சி கவிழ்ப்பு
அப்போது, தமிழகத்தில் திமுக ஆட்சியை கலைக்க வேண்டும்; சுப்பிரமணியன் சுவாமியை நிதி அமைச்சராக்க வேண்டும்; தம் மீதான ஊழல் வழக்குகளை நீர்த்து போகச் செய்ய வேண்டும் என்கிற அஜெண்டாவை வாஜ்பாய் மூலம் செயல்படுத்த நெருக்கடி தந்தார் ஜெயலலிதா. ஆனால் வாஜ்பாய் இடம்தராத சூழ்நிலையில் வாஜ்பாய் அரசாங்கத்துக்கான ஆதரவை ஜெயலலிதா வாபஸ் பெற்றார்.. அப்போது வாஜ்பாய் அரசாங்கம் ஒற்றை வாக்குகளில் பெரும்பான்மையை இழந்தது. அப்போதுதான் பாஜகவுக்கு அரவணைப்பு கரம் நீட்டியது திமுக. பின்னாளில் பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்து மறுபடியும் முறித்துக் கொண்டது. 2014 லோக்சபா தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளராக மோடியை முன்னிறுத்திய போது அந்த குஜராத் மோடியா? இந்த தமிழ்நாட்டு லேடியா? என வசனம் பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜெயலலிதா.

மீண்டும் மீண்டும் அதிமுகவிடம் அடைக்கலம்
இப்படி பாஜகவுக்கு நட்புக் கரம் நீட்டுவதும் பின்னர் நட்புக் கரத்தை உதறிவிட்டு தள்ளிவிட்டு போய்விடுவதும் அதிமுகவின் கூட்டணி வரலாறு. இப்போதைய எடப்பாடி பழனிசாமி மட்டும் விதிவிலக்கா என்ன? டெல்லி மேலிடம், அதிமுக கோஷ்டிகளை ஒன்றிணைக்க பாடாய் படுகிறது.. எடப்பாடி பழனிசாமியோ, அதெல்லாம் முடியாது.. அமித்ஷாவை அவசியம் சந்திக்கனுமா? என எதிர்த்து களமாடுகிறார். அந்தோ பாவம் பாஜக..அதிமுகவுக்காக காலந்தோறும் தவமாய் தவம் கிடக்கிறது!
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications