பெங்களூரில் ஜூலை 17-ல் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம்.. தொல். திருமாவளவனுக்கு அழைப்பு!
சென்னை: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஜூலை 17-ந் தேதி எதிர்க்கட்சிகள் நடத்தும் ஆலோசனை கூட்டத்துக்கு திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் இதற்கான முன் முயற்சிகளை எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து பீகார் தலைநகர் பாட்னாவில் 17 எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் கடந்த மாடம் 23-ந் தேதி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 6 மாநில முதல்வர்களும் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் இந்த கூட்டம் காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவின் பெங்களூருக்கு மாற்றப்பட்டது. பெங்களூரில் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் 17,18-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க திமுகவின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசிக தலைவர் தொல்.திருமாவளவனுக்கு காங்கிரஸ் கமிட்டி அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் அனுப்பி உள்ளார். இதனால் இந்த அழைப்பை ஏற்று பெங்களூர் அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திருமாவளவனும் பங்கேற்கக் கூடும் என தெரிகிறது.
பாட்னா கூட்டத்தில் பங்கேற்ற ஆம் ஆத்மி கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கடும் கருத்து வேறுபாடுகள் வெடித்துள்ளன. ஆம் ஆத்மி கட்சியை காங்கிரஸ் பாஜகவின் பி டீம் என பகிரங்கமாக விமர்சித்து வருகிறது. இதனால் பெங்களூர் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்குமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
-
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 360-டிகிரி மிரட்டல் அனுபவம்! ரசிகர்களை திக்குமுக்காட வைத்த சர்ப்ரைஸ் -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications