‛டார்ச்லைட்’ சின்னம்! கமலின் மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் ஒதுக்கிய தேர்தல் ஆணையம்! என்ன நடந்தது
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச்லைட் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் டார்ச்லைட் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து கமல்ஹாசன் கட்சி எப்படி பெற்றது? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
நடிகராக இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர் கமல் ஹாசன். இவர் கடந்த 2018 ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கினார். இதையடுத்து கடந்த 2019 ம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்டது. இதில் தோல்வியடைந்தது.

அதன்பிறகு 2021 சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது. நடிகர் கமல் ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் வெற்றியின் விளிம்புக்கு சென்ற கமல்ஹாசன் கடைசியில் தோல்வியடைந்தார். கமல்ஹாசனை பாஜகவின் வானதி சீனிவாசன் வீழ்த்தினார்.
இதன்மூலம் மக்கள் நீதி மய்யத்துக்கு தமிழகசட்டசபை மற்றும் நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் இல்லாத சூழல் உள்ளது. இந்நிலையில் தான் விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைக்க காய் நகர்த்தி வருகிறது. விரைவில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில் தான் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் என்பது இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட கட்சியாக மட்டுமே உள்ளது. இன்னும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அது மாறவில்லை.
இதனால் டார்ச்லைட் சின்னம் கேட்டு மக்கள் நீதி மய்யம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பான கடிதத்தில், கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டசபை தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிட்டது. அதேபோல் இந்த முறையும் கட்சிக்கு டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிட இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications