வந்தது நம்பிக்கை! கொரோனா தடுப்பூசியால் ஒன்னும் ஆகாது- கிராமங்களில் நீண்ட வரிசைகளில் குவிந்த மக்கள்
சென்னை: கொரோனா தடுப்பூசி போடுவதால் நன்மைதான்; பாதுகாப்பானதுதான் என்பதை உணர்ந்து கொண்டதால் தமிழகத்தில் கிராமங்களில் காலை முதலே நீண்ட வரிசைகளில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர் பொதுமக்கள்.
Recommended Video
கொரோனா முதல் அலையின் முடிவில்தான் கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்தன. நாட்டில் கடந்த 6 மாதங்களாக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

கொரோனா தடுப்பூசி திட்டம்
தற்போது வரை மொத்தம் 27.23 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. முதல் கட்டமாக முன்களப் பணியாளர்கள், 2-வது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டோர், 3 வது கட்டமாக 18 முதல் 45 வயதுக்குட்பட்டோர் என தடுப்பூசி போடப்பட்டது.

அர்த்தமற்ற வதந்திகள்
கடந்த சில மாதங்களாக கொரோனா 2-வது அலை உக்கிரமாக இருந்த நிலையிலும் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு கிராமங்களில் குறைவாகவே இருந்தன. ஒரு கிராமத்தில் அதிகபட்சம் 10 பேர் அல்லது 15 பேர்தான் தடுப்பூசி போட்டிருந்தனர். ஏனெனில் தடுப்பூசிகள் தொடர்பான சில தேவையற்ற வதந்திகள் மக்களை அச்சத்துக்குள்ளாக்கி இருந்தன.

கிராமங்களில் நம்பிக்கை
ஆனால் கொரோனா தடுப்பூசிகளின் 2 டோஸும் கண்டிப்பாக போட வேண்டும்; இந்த தடுப்பூசிகள்தான் கொரோனாவால் உயிரிழப்பதில் இருந்து நம்மை பாதுகாக்கும் என்கிற இடைவிடாத விழிப்புணர்வு பிரசாரங்கள் இப்போதுதான் கிராமங்களை சென்றடைந்துள்ளன. கொரோனா தடுப்பூசிகள் போடுவதால் உடலுக்கு எதுவும் நேராது; அதிகபட்சம் சோர்வு அல்லது காய்ச்சல் மட்டுமே ஏற்படும் என்கிற நம்பிக்கை கிராம மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் வரிசைகள்
இதனால் கிராமப்புறங்களில் கொரோனா தடுப்பூசிகள் போடுவதற்கு காலை முதலே நீண்ட வரிசைகளில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்; சில இடங்களில் கற்களை வைத்து வட்டமிட்டு தங்களது பெயரை எழுதிவிட்டு செல்கிற நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன. கொரோனா தடுப்பூசியை ஏன் போட முன்வந்தீர்கள் என்ற கேள்விக்கு, ஒருவித அச்சம் இருந்து வந்தது. இப்போது கொரோனா தடுப்பூசி தொடர்பான தயக்கம், அச்சம் எதுவும் இல்லை; அதனால் போட வந்தோம் என்கின்றனர் பொதுமக்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications