கலைஞர் நினைவிடம் அல்ல.. "கலைஞரின் தாஜ்மஹால்.." நெகிழ்ச்சியுடன் சொன்ன நடிகர் ரஜினிகாந்த்!
சென்னை: சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிட திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், முதல்வர் மு.க ஸ்டாலினோடு கலைஞர் நினைவிடத்தை சுற்றிப்பார்த்தார். தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், "இதனை கலைஞர் நினைவிடம் என்று சொல்வதை விட கலைஞரின் தாஜ்மஹால் என்று கூறலாம்" என்றார்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி காலமானார். இதையடுத்து, அவரது உடல் சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அமைந்துள்ள வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி அமைந்ததும் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட மெரினாவில் அவருக்கு நினைவிடம் கட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

ரஜினிகாந்த், வைரமுத்து பங்கேற்பு: அதன்படி தமிழக அரசு சார்பில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ 39 கோடியில் இந்த நினைவிடம் சீரமைக்கப்பட்டது. மேலும் அண்ணாவின் நினைவிடமும் புனரமைக்கப்பட்டது. இதையடுத்து இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தை திறந்து வைத்தார். இதேபோல் சீரமைக்கப்பட்ட அண்ணாவின் நினைவிடத்தையும் திறந்து வைத்தார்.
கலைஞர் நினைவிட திறப்பு விழாவில் தமிழக அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். குறிப்பாக கி வீரமணி, திருமாவளவன், வைகோ, கோபாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோரும், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் வைரமுத்து ஆகியோரும் கலந்துகொண்டனர். நினைவிட திறப்பு விழாவிற்கு வருகை தந்த நடிகர் ரஜினிகாந்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல் ஆளாக நின்று வரவேற்றார்.
ரஜினிகாந்த் பேட்டி: கருப்பு நிற சட்டையில் வந்த நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் ஸ்டாலின் அருகேயே நின்றார். நினைவிடத்தை திறந்து வைத்த பிறகு நினைவிட வளாகத்தை பேட்டரி காரில் சென்று முதல்வர் முக ஸ்டாலின் பார்த்தார். அப்போது முதல்வர் ஸ்டாலினுடன் ரஜினிகாந்தும் பேட்டரி காரில் சென்றார். அப்போது, நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் உள்ளிட்டவை குறித்து ரஜினிகாந்திற்கு மு.க ஸ்டாலின் விளக்கினார்.
ரஜினிகாந்தும் முதல்வர் ஸ்டாலின் சொல்வதை கவனமாக கேட்டபடி வந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது:- மிக மிக அருமையாக இருக்கிறது. அற்புதமாக இருக்கிறது. இதனை கலைஞர் நினைவிடம் என்று சொல்வதை விட கலைஞரின் தாஜ்மஹால் என்றே கூறலாம். அந்த அளவிற்கு அருமையாக இருக்கிறது. இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications