சென்னையில் சபலப்பட்ட லாரி டிரைவர்.. வில்லங்க செயலியில் தனியாக அழைத்த இளைஞர்கள்! நம்பி போனவருக்கு கொடூரம்
சென்னை: சென்னை துரைப்பாக்கம் அருகே ஓரினச்சேர்க்கைக்கு இளைஞர் ஒருவர் அழைத்த நிலையில் அதனை நம்பி சென்ற லாரி டிரைவரை சரமாரியாக தாக்கி நகை, பணம் உள்ளிட்டவற்றை பறித்துச்சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீசார், கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் ஏதேனும் லிங்குகளை அனுப்பி பணம் பறிப்பதை கும்பல் வாடிக்கையாக வைத்துள்ளது. ஆசையை தூண்டி பணத்தை பறிப்பதையே இந்த கும்பலினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். போலீசாரும் பல்வேறு விழிப்புணர்வுகளை செய்தாலும் இது போன்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் சென்னையில் லாரி டிரைவர் ஒருவரை ஆசை காட்டி வர வைத்து தங்க நகை, பணத்தை அபேஸ் செய்துள்ளனர். இது குறித்த விவரம் வருமாறு:-

லாரி டிரைவருக்கு அடி, உதை
சென்னை வெட்டுவாங்கேணியை சேர்ந்த லாரி டிரைவர் சத்யராஜ். இவருக்கு துரைப்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் வெங்கட்பிரசாத் என்பவரது அறிமுகம் கிடைத்தது. இருவரும் பேசி வந்தனர். இந்த நிலையில் ஒரு நாள் ஓரின சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் ஆன்லைன் வில்லங்க செயலி மூலமாக சத்யராஜை வெங்கட்பிரசாத் தொடர்பு கொண்டார்.
துரைப்பாக்கத்துக்கு வாருங்கள் என்று அழைத்து இருக்கிறார். இதனை நம்பி அங்கு சென்ற சத்யராஜை கல்லூரி மாணவர் அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவர்களது நண்பர்கள் இருவர் அங்கு வந்துள்ளனர். அவர்கள் சத்தியராஜை திடீரென தாக்க தொடங்கினர். அடித்து உதைத்து அவரிடம் இருந்த தங்க கம்மலை பறித்தனர். மேலும் மொபைலில் இருந்த ரூ.6,300-ஐ ஜிபே மூலமாக அபகரித்தனர்.
3 பேர் கைது
இதனால் அதிர்ச்சியடைந்த சத்தியராஜ், இது குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சத்தியராஜை மிரட்டி பணம் பறித்தது கல்லூரி மாணவர்களான வெங்கடபிரசாத் (20), விக்னேஷ் (20), கார்த்திக் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டது.
-
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்!












Click it and Unblock the Notifications