வாங்க.. நீங்கள் ஆள வேண்டும்.. ரஜினிகாந்த் வீடு முன் பரபரக்கும் போஸ்டர்கள்.. குவியும் ரசிகர்கள்!
நடிகர் ரஜினிகாந்த் வீடு முன் அவரின் ரசிகர்களின் சார்பில் நிறைய போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டுள்ளது.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வீடு முன் அவரின் ரசிகர்களின் சார்பில் நிறைய போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டுள்ளது.
Recommended Video
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக 2017 டிசம்பர் இறுதியில் அறிவிப்பை வெளியிட்டார். அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் அவர் அரசியலுக்கு வருவது குறித்து உறுதியாக எதுவும் தெரிவிக்கவில்லை.
கட்சி எப்போது தொடங்கப்படும், கூட்டணி என்ன? கொள்கை என்ன என்பது குறித்து ரஜினிகாந்த் அதன்பின் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். அவ்வப்போது செய்தியாளர்களை மட்டும் சந்தித்து வந்தார்.

இன்று மீட்டிங்
இந்த நிலையில் பல்வேறு எதிர்பார்ப்பு சர்ச்சைகளுக்கு இடையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த், தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார். ஏற்கனவே ரஜினிகாந்த் கடந்த வாரம் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார். அரசியல் குறித்த பல்வேறு விஷயங்களை ரஜினிகாந்த் ஆலோசனை செய்தார். இதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு, முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

முக்கிய அறிவிப்பு
இந்த நிலையில் இன்று முக்கிய அரசியல் அறிவிப்பு ரஜினி தரப்பிடம் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்போதும் வீட்டு வாசலில் நின்று பேட்டி கொடுக்கும் ரஜினி இன்று ஸ்டார் ஹோட்டலில் காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்திக்கிறார். இதில் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்கிறார்கள்.

வீடு முன் போஸ்டர்
இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் வீடு முன் அவரின் ரசிகர்களின் சார்பில் நிறைய போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. தலைவா.. நீங்க வர வேண்டும், நீங்கள் ஆள வேண்டும் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இன்னும் சில போஸ்டர்களில், கோட்டையை பிடிக்க போவது நாம்தான், 2021 கோட்டையில் தலைவர் என்று வித விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அவரின் மக்கள் மன்றம் சார்பாக இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

ரசிகர்கள் ஏன்?
அதேபோல் அவரின் வீடு முன் ரசிகர்கள் கூட தொடங்கி உள்ளனர். கையில் சுவீட் மற்றும் பூக்களுடன் ரஜினி ரசிகர்கள் அவரின் போயஸ் கார்டன் இல்லம் முன் கூட தொடங்கி உள்ளனர். ரஜினிகாந்த் இன்னும் சற்று நேரத்தில் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வெளியே வருவார். அவரை வரவேற்க வேண்டும் என்பதற்காக அவரின் வீட்டு வாசலில் பலர் காத்திருக்கிறார்கள் .
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications