தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்த காதல் ஜோடி.. அப்பறம் நடந்த ட்விஸ்ட் பாருங்க.. சென்னையில் பரபரப்பு
தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடியை விரட்டியடித்துள்ளனர் பொதுமக்கள்
சென்னை: காதல் ஜோடி ஒன்று, தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலைக்கு முயன்றபோது, பொதுமக்கள் அவர்களை விரட்டியடித்த சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தில் ஏராளமான தற்கொலைகள் பெருகி வருகின்றன.. முன்பெல்லாம் வேலை கிடைக்காத விரக்தியில் எத்தனையோ இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள்..
வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் வரதட்சணை கொடுமைகள் காரணமாகவே தற்கொலைகள் பெருகி வந்தன.. ஆனால், நிலைமையே வேறு.

தற்கொலைகள்
இன்றைய சூழலில் காதல் தோல்விகளின் தற்கொலைகள்தான் அதிகமாகி கொண்டு வருகின்றன.. இளம்வயதிலேயே புரிதல் இல்லாமல் காதலிப்பதும், எதையும் பொறுமையுடன், பக்குவத்துடன் அணுகும் போக்கு இளைய தலைமுறையிடம் இல்லாததும்தான் தற்கொலைகள் பெருக காரணமாகி வருகின்றன. அப்படித்தான் ஒரு ஜோடி தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.. ஆனால், அவர்களை பொதுமக்களே விரட்டி அடித்து தற்கொலையை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.

தற்கொலை முயற்சி
எழும்பூரில் உள்ள காந்தி-இர்வின் பாலம் அருகே காதலர்கள் 2 பேர் வந்துள்ளனர்.. அங்கேயே 2 பேருக்கும் ஏதோ தகராறு வந்துள்ளது.. இருவருமே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.. சண்டை ஓயவே இல்லை.. ஒருகட்டத்தில் காதலி, பாலத்தின் கீழே உள்ள ரயில் தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள ஓடினார்.. அதை பார்த்ததும், பின்னாடியே காதலனும் தற்கொலை செய்ய ஓடினார்.. 2 பேருமே சேர்ந்து அங்கிருந்த தண்டவாளத்தில் படுத்து கொள்ள முயன்றனர்..

கூச்சல்
ஆனால், அதற்குள் அங்கிருந்த பொதுமக்களில் சிலர் இதை பார்த்துவிட்டு கூச்சலிட்டனர்.. அங்கிருந்து எழுந்து செல்லுமாறு சத்தம் போட்டனர்.. அதற்குள் மேலும் சிலர் அந்த பகுதியில் கூடிவிட்டனர்.. எல்லாருமே ஒன்றுசேர்ந்து கூச்சலிட்டு விரட்டவும், பயந்து போன காதல்ஜோடி, தற்கொலையை கைவிட்டுவிட்டு அலறியடித்து கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தது..

பரபரப்பு
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.. அரை மணி நேரத்துக்கும் மேலாக காந்தி இர்வின் பாலம் அருகே டிராபிக் ஜாம் ஏற்பட்டது.. அந்த ஜோடி யார் என்பது தெரியவில்லை.. எதற்காக அவர்களுக்குள் சண்டை வந்தது என்பதும் தெரியவில்லை.. இதுகுறித்து உடனடியாக பொதுமக்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.. அதன்பேரில் போலீசாரும் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications