திடீரென.. மொத்தமாக கோவைக்கு போன "நீல திமிங்கலம்".. மக்களுக்கு குஷியோ குஷி.. சூப்பர் வளர்ச்சி
சென்னை: சென்னையில் இருப்பது போலவே அல்ட்ரா மாடல் ஸ்டைல் கொண்ட புதிய லோ ப்ளோர் பேருந்துகள் கோவைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன. கோவையில் இந்த பேருந்துகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் இந்த பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதன்படி மதுரையில் இந்த பேருந்துகள் இந்த வாரம் அமலுக்கு வர உள்ளன. கடந்த வாரம் இதற்காக அந்த பேருந்துகள் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டன. நேற்று கோவைக்கு இந்த பேருந்துகள் கொண்டு செல்லப்பட்டு உள்ளன.

முதல் கட்டமாக அசோக் லேலண்ட் பேருந்துகள் சென்னையில் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. 80 பேருந்துகள் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது போக மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, கும்பகோணம், விழுப்புரம் ஆகிய அனைத்து நகரங்களுக்கும் சென்னையில் இயங்கும் லோ ஃப்ளோர் பேருந்துகள் வழங்கப்பட உள்ளது. 17 முதல் 38 பேருந்துகள் வரை மாவட்டங்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் வாங்கப்பட்டு உள்ளன. மதுரையில் இரண்டாம் கட்டமாக இந்த பேருந்துகள் வழங்கப்பட உள்ளன .
பேருந்துகள்; சென்னை, மதுரை மற்றும் கோவை நகரத்தில் உள்ள பயணிகள், குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள், விரைவில் பயணம் செய்ய மிகவும் எளிதாக இருக்கும், வரும் மாதங்களில் 1552 தாழ்தள, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் உள்ள பேருந்துகளை பெருநகர போக்குவரத்துக் கழகம் பெற உள்ளது.
இந்த வாகனங்கள் ஜேர்மன் அபிவிருத்தி வங்கியின் (KfW) நிதியுதவியின் கீழ் வாங்கப்படும் பேருந்துகளின் லிஸ்ட் ஆகும். தமிழ்நாட்டில் அதிக அளவில் பேருந்துகள் வாங்கப்பட்டு வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
MTC தவிர, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC) கோயம்புத்தூர் மற்றும் மதுரைக்கு தலா 100 தாழ்தள பேருந்துகளை இதே ஒப்பந்த முறைப்படி வாங்க உள்ளது. முழுமையாக கட்டப்பட்ட 552 தாழ்தளப் பேருந்துகளை வாங்குவதற்கான செயல்முறை இறுதி கட்டத்தில் உள்ளது, ஒரு வாரத்தில் KfW அதன் அனுமதியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தொடக்கத்தில், 442 தாழ்தளப் பேருந்துகளை வாங்குவதற்கு ஏலம் எடுத்தது. மாற்றுத்திறனாளி பயணிகளுக்கான தாழ்தளப் பேருந்துகளை வாங்குவது தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, டெண்டர் நிபந்தனைகளைப் பயன்படுத்தி, லோ-ஃப்ளோர் பேருந்துகளின் எண்ணிக்கையை 25 சதவீதம் அதிகரித்து 552 ஆக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டது.

கூடுதல் பேருந்துகள்: சென்னை, மதுரை மற்றும் கோவையில் அல்ட்ரா மாடல் ஸ்டைல் கொண்ட கூடுதல் பேருந்துகளை களமிறக்க ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்த பேருந்துகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. நீல நிறத்தில் ஸ்டைலாக இருக்கும் பேருந்துகள் வாங்கப்பட்டு உள்ளன.
இதில் சென்னைக்கான பேருந்துகளை வாங்க, 500 தாழ்தள மின்சார பேருந்துகள் (400 Non A/C & 100 A/C) கொள்முதல் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. 3 ஏலதாரர்கள் தங்கள் ஏலத்தை சமர்ப்பித்துள்ளனர்.
1. ஒலெக்ட்ரா
2. ஸ்விட்ச் மொபிலிட்டி (OHM குளோபல்)
3. ஏரோ ஈகிள் ஆட்டோமொபைல் ஆகியவை போட்டியில் உள்ளான.
இது போக KfW நிதியுதவியின் கீழ் 1,771 BS6 டீசல் பேருந்துகளை வாங்குவதற்கான மற்றொரு டெண்டர் விடப்பட்டது. இது சாதாரண பேருந்துகள் ஆகும். MTCக்கான 245 பேருந்துகள் உட்பட ஸ்டாண்டர்ட்-ஃப்ளோர் பேருந்துகளின் எண்ணிக்கை இப்போது 1,614 ஆக உள்ளது. மீதமுள்ளவற்றில், TNSTC விழுப்புரத்திற்கு 347 பேருந்துகளும், சேலம் மற்றும் கும்பகோணம் மாநகராட்சிகளுக்கு தலா 303 பேருந்துகளும், TNSTC மதுரை மற்றும் கோவைக்கு முறையே 251 மற்றும் 115 பேருந்துகளும், TNSTC திருநெல்வேலிக்கு 50 பேருந்துகளும் கிடைக்கும்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications