வங்கி கடன்களுக்கான வட்டி குறையுமா.. டிசம்பர் 5ம் தேதி ரிசர்வ் வங்கி எப்படி முடிவெடுகக வாய்ப்பு?
சென்னை: ரிசர்வ் வங்கி ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை , ரூபாய் கொள்கைக் கூட்டத்தை நடத்தும். அப்போது பணவீக்கம், ஜிடிபி போன்ற காரணங்களை முன்வைத்து ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைக்கும் அல்லது ஏற்றும். தற்போது பணவீக்கம் குறைவு காரணமாக, வங்கிகளுக்கான ரெப்போ விகிதத்தை 0.25 புள்ளிகளை ரிசர்வ் வங்கி குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் எதிர்பார்ப்பை விட பொருளாதார வளர்ச்சி 8.2% என சிறப்பாக ஆக பதிவாகி உள்ளதால், ரிசர்வ் வங்கி விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்க வாய்ப்புள்ளதாகவும் சில பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பொதுவாக நாட்டில் விலைவாசி உயர்வு (சில்லறை பணவீக்கம்) 4% என்ற இலக்கு வரம்பிற்குள் வைத்திருப்பதே ரிசர்வ் வங்கியின் முதன்மை நோக்கம் ஆகும். அப்படி இருந்தால் தான் மக்களிடம் பணப்புழக்கம் இருக்கும்.எனவே பணவீக்கம் இலக்கிற்குக் குறைவாக இருந்தால், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வட்டி விகிதம் குறைக்கப்படும். அதேபோல் : பணவீக்கம் இலக்கைத் தாண்டி அதிகரித்து சென்றால், அதை கட்டுப்படுத்த வட்டி விகிதம் உயர்த்தப்படும். இதுதான் பொதுவான நடைமுறை .

இதன்படி ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மாற்றுவது குறித்து முடிவெடுக்க, நாணய கொள்கைக் குழு ( MPC என ஆங்கிலத்தில் அழைப்பார்கள்) கூடுகிறது. இந்த முடிவுகள் பொதுவாக ஆண்டுக்கு ஆறு முறை நடைபெறும் . அதில் தான் ரெப்போ விகிதம் குறித்து முடிவெடுக்கப்படும். தற்போது நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையிலான சில்லறை பணவீக்கம், கடந்த இரண்டு மாதங்களாக அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட 2% என்ற குறைந்த வரம்பிற்குக் கீழே நீடிக்கிறது.
எனினும், வரித் திரட்சி, பொது முதலீடு மற்றும் ஜி.எஸ்.டி. வரி குறைப்பு போன்ற பல்வேறு சீர்திருத்தங்களால் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளதால், ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே தொடரலாம் என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர்.
நாணய கொள்கைக் குழுவின் கூட்டம் டிசம்பர் 3 முதல் 5 வரை திட்டமிடப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, விகித நிர்ணய குழுவின் முடிவை டிசம்பர் 5 அன்று அறிவிக்க இருக்கிறார். ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு பிப்ரவரியில் வட்டி விகித குறைப்பை செயல்படுத்த தொடங்கியது. அப்போது முதல் தொடங்கி தற்போது வரை ஒட்டுமொத்தமாக 100 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 5.5% ஆகக் கொண்டு வந்திருக்கிறது.
நிபுணர்களின் கருத்துக்கள்
சில பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, பணவீக்க அழுத்தம் குறைந்திருப்பதால், ரிசர்வ் வங்கி அதன் வரவிருக்கும் நாணய கொள்கைக் கூட்டத்தில் முக்கிய கடன் விகிதத்தை 25 bps குறைக்கலாம். நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையிலான சில்லறை பணவீக்கம், கடந்த இரண்டு மாதங்களாக அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட 2% என்ற குறைந்த வரம்பிற்குக் கீழே நீடிக்கிறது.
விகிதத்தை மாற்றாமல் இருக்க வாய்ப்பு
எனினும், பொருளாதார வளர்ச்சி அதிகரித்திருப்பதாலும், நிதி ஒருங்கிணைப்பு, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது முதலீடு மற்றும் ஜி.எஸ்.டி. வரி குறைப்பு போன்ற சீர்திருத்தங்களால் இது நிலைத்திருப்பதன் காரணமாக, ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களில் எந்தமாற்றமும் இல்லாமல் தொடரலாம் என்று சில பொருளாதார நிபுணர்கள் நம்புகின்றனர்.
ஹெச்டிஎப்சி கூறுவது என்ன
ஹெச்.டி.எஃப்.சி. வங்கி வெளியிட்ட அறிக்கையில், "இந்த ஆண்டில் வளர்ச்சி அதிகமாகவும் பணவீக்கம் குறைவாகவும் இருந்தது. எனவே, வரவிருக்கும் ரிசர்வ் வங்கியின் விகித முடிவு கடினமானதாகவே இருக்கும். எனினும் இந்த நிதியாண்டின் இரண்டாம் பாதியில் வளர்ச்சியில் நீடிக்கும் அபாயங்கள் மற்றும் 2027 நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டு வரை பணவீக்கம் 4% க்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், வரவிருக்கும் கொள்கையில் மேலும் .25 புள்ளிகள் குறைப்புக்கு இன்னும் வாய்ப்புள்ளது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ கூறுவது என்ன
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் பொருளாதார ஆராய்ச்சித் துறை வெளியிட்ட ஆய்வறிக்கையில், வலுவான ஜிடிபி வளர்ச்சி இருக்கிறது. அத்துடன் குறைந்தபட்ச பணவீக்கமும் இம்முறை இருக்கிறது. எனவே இந்த வாரம் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் கூட்டத்தில் நடுநிலையான நிலைப்பாட்டை தொடர்வது ரிசர்வ் வங்கியின் பொறுப்பு என்று கூறியுள்ளது.
பேங்க் ஆஃப் பரோடா
பேங்க் ஆஃப் பரோடாவின் தலைமைப் பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸ் கூறுகையில், "ரெப்போ விகிதத்தைப் பொறுத்தவரை இது நெருக்கமான முடிவாக இருக்கும். நாணய கொள்கை எதிர்காலத்தை நோக்கியதாக இருப்பதால், 2026 நிதி ஆண்டின் நான்காம் காலாண்டு மற்றும் 2027 நிதி ஆண்டில் பணவீக்கம் 4% பிளஸ் என்கிற அளவில் இருக்க வாய்ப்புள்ளது, இதனால் உண்மையான ரெப்போ விகிதம் 1-1.5% ஆக இருக்கும். எனவே, கொள்கை விகிதம் நியாயமான அளவில் இருப்பதாகத் தோன்றுகிறது. இந்த நிலைமைகளின் கீழ், கொள்கை விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது என்று நாங்கள் நினைக்கிறோம்," என்று கூறினார்.
பொருளாதார நிபுணர் தர்மகீர்த்தி ஜோஷி கோரிக்கை
கிரிசில் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் தர்மகீர்த்தி ஜோஷி கூறுகையில், ரிசர்வ் வங்கியின் 2-6% இலக்கு வரம்பின் கீழ்ப்பகுதிக்கு கீழே சில்லறை பணவீக்கம் குறைந்ததற்கான முக்கிய காரணம் உணவுப் பணவீக்கமே ஆகும், இருப்பினும் எரிபொருள் பணவீக்கமும் குறைவாகவே உள்ளது. தங்கத்தைத் தவிர்த்து, முக்கிய பணவீக்கம் அக்டோபரில் 2.6% ஆக இருந்தது, இது ஜி.எஸ்.டி. குறைப்புகளால் நடந்த மாற்றம் ஆகும். எனவே டிசம்பரில் ரெப்போ விகிதத்தில் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம். வளர்ச்சி வலுவாக இருந்தாலும், அக்டோபரில் சில்லறை பணவீக்கத்தின் குறிப்பிடத்தக்க சரிவு இந்த சரிவுக்கான கூடுதல் வாய்ப்பை உருவாக்கியுள்ளது," இவ்வாறு ஜோஷி கூறினார்.
எஸ்.பி.எம். வங்கி நிதிச் சந்தை தலைவர் கருத்து
எஸ்.பி.எம். வங்கி நிதிச் சந்தை தலைவர் மந்தர் பிடாலே கூறுகையில், "டிசம்பர் மாதம் எடுக்கும் கொள்ளை முடிவிலும் தற்போதைய நிலையே தொடரும் என்று எதிர்பார்க்கிறேன். ஏனெனில் புதிய வட்டி குறைப்பு காரணமாக வங்கியில் பணம் சேமிப்பு குறையும். எனவே வங்கிகளுக்கான நிதியை திரட்டுவதில் சிக்கல் ஏற்படும். எனவே தற்போதைய நிலையே தொடர வேண்டும்" என்றார்
ஐ.சி.ஆர்.ஏ.வின் தலைமைப் பொருளாதார நிபுணர்
ஐ.சி.ஆர்.ஏ.வின் தலைமைப் பொருளாதார நிபுணர் அதிதி நாயர் கூறுகையில், 2026 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 8% ஐத் தாண்டிய நிலையில், அக்டோபரில குறைந்த சில்லறை பணவீக்கத்தைப் பொருட்படுத்தாமல், டிசம்பர் மாதம் வட்டி விகிதக் குறைக்கலாம் என்பது இப்போது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது என்றார்.
கிருஷ்ணா குழுமம் கருத்து
கிருஷ்ணா குழுமம் மற்றும் கிரிசுமி கார்ப்பரேஷனின் தலைவர் அசோக் கபூர் கூறுகையில், பணவீக்கம் சாதனை அளவில் குறைவாக இருப்பதால், ரிசர்வ் வங்கிக்கு 25 அடிப்படை புள்ளிகள் குறைப்பைக் கருத்தில் கொள்ள கொள்கை இடம் உள்ளது என்று நான் நம்புகிறேன். ஜி.எஸ்.டி. சீரமைப்பு மற்றும் ரிசர்வ் வங்கியின் ஒட்டுமொத்த 100 bps விகிதக் குறைப்பு ஆகியவை ஏற்கனவே வீட்டுவசதி மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளுக்கும், மிகப்பெரிய பொருளாதாரத்திற்கும் பயனளிப்பதாக இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் மேலும் வட்டி குறைப்பு நடந்தால், தற்போதுள்ள வளர்ச்சியின் வேகத்தை இது மேலும் வலுப்படுத்தும்" இவ்வாறு கபூர் கூறினார்.
-
அய்யோ.. அக்கவுண்டில் அநாமத்தாக வந்த 10 கோடி! ஒரே நொடியில் கோடீஸ்வரியான பெண்! உடனடியாக எடுத்த முடிவு -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு!












Click it and Unblock the Notifications