வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகம், கேரளா, கர்நாடகாவில் பருவமழை தீவிரம்
வடமேற்கு வங்கக் கடலில் வரும் 21 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: வடமேற்கு வங்கக்கடலில் வரும் 21 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதியால், தமிழக கடலோர பகுதிகளில் கேரளா , கர்நாடகாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மும்பையில் பெய்து வரும் மழையால் நகரின் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. கேரளாவிலும், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களிலும் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை தொடங்கி கடலோர மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களான கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் 21ஆம் தேதி வரைக்கும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 17ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரைக்கும் மேற்கு ஹிமாலயா, உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, கிழக்கு ராஜஸ்தான், வடக்கு மத்திய பிரதேசத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரைக்கும் டெல்லியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீரில் 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரைக்கும் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வடமேற்கு வங்கக்கடலில் வரும் 21 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கேரளா, கர்நாடகா, தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரமடையும் பட்சத்தில் ஒடிசா மாநில கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications