அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு..5 நாட்களுக்கு சாரல் மழையில் நனைய தயாராகுங்கள்
சென்னை: கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 17ஆம் தேதி வரைக்கும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மாண்டஸ் புயல் கரையைக் கடந்து சில நாட்கள் ஆகியும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பாரூர், தஞ்சாவூர், புலிப்பட்டி, காஞ்சிபுரத்தில் தலா 9 செமீ மழை பதிவாகியுள்ளது.
கறம்பக்குடி, செய்யூர், மதுராந்தகம் பகுதியில் தலா 8 செமீ மழை பதிவாகியுள்ளது. உத்திரமேரூர், சிங்கம்புணரி சிவகங்கை பகுதிகளில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது. மரக்காணம், செங்கல்பட்டு, விழுப்புரம்,, மகாபலிபுரம் ஆவடி தலா 6, தேன்கனிக்கோட்டை, தஞ்சாவூர் பகுதியில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது.

இதனிடையே கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, இன்று முதல் 17ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
13ஆம் தேதியன்று லட்சதீவு பகுதிகள், கேரள கர்நாடக கடலோரப்பகுதிகள், தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 14ஆம் தேதியன்று லட்சதீவு பகுதிகள், கேரள கர்நாடக கடலோரப்பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 15 மற்றும் 16ஆம் தேதிகளில் மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.












Click it and Unblock the Notifications