தென் அந்தமான் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!
சென்னை: தென் அந்தமான் அருகே இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது; காற்றழுத்த தாழ்வுமண்டலமாக இது வலுப்பெற்று டிச.2-ல் தமிழக கடலோர பகுதியை நோக்கி நகரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: நேற்று தெற்கு அந்தமான், அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதி மற்றும் இந்திய பெருங்கடலை ஒட்டிய மத்திய ரேகை பகுதியில் நிலை கொண்டுள்ளது..

டிச 2-ல் தென் தமிழகம்
அடுத்த 36 மணிநேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் இது நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். பின்னர் டிசம்பர் 2-ந் தேதி தென் தமிழக கடலோர பகுதியை நோக்கி இது நகரக் கூடும். 29,30 ஆகிய நாட்களில் தமிழகம், புதுவை, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

தென் தமிழகத்தில் மழை
டிசம்பர் 1-ந் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும்.

கனமழைக்கு வாய்ப்பு
டிசம்பர் 2-ந் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களி அதி கனமழையும் தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும். டெல்டா மாவட்டங்கள், காரைக்கால், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
இடிமின்னல் மழை
டிசம்பர் 3-ந் தேதியன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும். ஏனைய கடலோர மாவட்டங்களில் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும். அடுத்த 48 மணிநேரத்துக்கு சென்னை, புறநகர் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications