வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இனிமேல் கனமழை தான்.. வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை கடற்கரையில் இருந்து தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்றும், இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு நோக்கி மெதுவாக நகர வாய்ப்பு உள்ளது என்றும், இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 18 ஆம் தேதி பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16 ஆம் தேதி தொடங்கியது. அந்த நேரத்தில் ஒரு 10 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கியது. அதன்பிறகு இரண்டு வாரங்கள் பெரிதாக மழை பெய்யவில்லை. மாறாக வெயில் வெளுத்து வாங்கியது.

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
தொடர்ந்து கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இனி வரும் நாட்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், வடகிழக்கு பருவமழை வேகமெடுக்க தொடங்கியுள்ளது எனவும் தொடர்ந்து வானிலை ஆய்வாளர்கள் கூறி வந்தனர்.
இந்த நிலையில் வங்கக் கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று காலை 8.30 மணியளவில் இலங்கை கடற்கரையில் இருந்து தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இன்று முதல் கனமழை ஆரம்பம்
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு நோக்கி மெதுவாக நகர வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 18 ஆம் தேதி வரை பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். வரும் 17 ஆம் தேதி சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
இப்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுமா என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும். என்று வானிலை மையம் கூறியுள்ளது.
தனியார் வானிலை ஆய்வாளர்கள் கருத்து
தமிழகத்தில் அடுத்தடுத்து 3 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் புயல் கூட உருவாகும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் கூறியிருந்தார். மேலும் 17 ஆம் தேதி சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் 12 செமீக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியிருந்தார்.
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறுகையில், முதற்கட்டமாக நாளை இரவு முதல் கடலோர மாவட்டங்களில் மழை தொடங்கும். 17 ஆம் தேதி வரை நல்ல மழை பெய்யும். தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுவதற்கு சான்ஸ் இல்லை. ஆனால் அதற்கடுத்ததாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக மாற வாய்ப்பு இருக்கிறது.
புயல் உருவாக வாய்ப்பு
அதாவது நாளை இரவில் இருந்து 18 ஆம் தேதி வரை ஒரு ரவுண்டு மழை பெய்யும். அடுத்ததாக இரண்டு நாட்கள் கொஞ்சம் மழை குறைந்து, பின்னர் 21, 22 ஆம் தேதிகளில் மீண்டும் ஒரு ரவுண்டு மழை தொடங்கும். 24 ஆம் தேதிக்கு பிறகு மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அப்போது உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியே புயலாக மாற வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications