Loyola Survey: திமுக கூட்டணியில் ஐக்கியமான தேமுதிக! லயோலா கணிப்பால் அதிர்ச்சி! பிரேமலதா தலையில் இடி!
சென்னை: திமுகவில் கூட்டணியில் இணைந்த தேமுதிகவால் எந்தவித பலனும் இல்லை என்று லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் வாரத்தில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து தீவிரமாக பேசி வருகிறார்கள். திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி ஆகிய 4 முனை போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலில் புதிதாக களம் காணும் நடிகர் விஜய் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பெண்கள், இளைஞர்களின் ஆதரவு அவருக்கு அதிகம் இருப்பதால் சட்டசபை தேர்தலில் தவெக அனைத்து தொகுதிகளிலும் கணிசமான வாக்குகள் பெறும் என சொல்லப்படுகிறது.
விஜய்க்கு 25 சதவீதம் வரை வாக்குகள் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் தவெகவினரோ 41 சதவீதம் இருப்பதாக ஒரு புள்ளி விவரத்தை கூறி வருகிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க திமுக கூட்டணியில் தற்போது முதல் முறையாக இணைந்துள்ள தேமுதிகவின் வாக்கு சதவீதம் என்பது 2006, 2011 கால கட்டங்களில் கணிசமான அளவில் இருந்த நிலையில் அதன் பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளது.
இந்த கட்சியின் வரவால் திமுக கூட்டணி கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் வரை கொடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே சுதீஷுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுத்தாகிவிட்டது.
திமுக கூட்டணியில் ஐக்கியமான தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, எப்படியும் கட்சியை காப்பாற்ற இந்த தேர்தலில் நல்லதொரு வெற்றியை பெறுவோம் என கருதியிருக்கிறார். இந்த நிலையில் அவர் தலையில் இடியை இறக்கியது போல் லயோலா கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
கடந்த 25 ஆண்டுகளாக லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் ஐபிடிஎஸ் என்ற அமைப்பு கருத்துக் கணிப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் யாருக்கு எத்தனை சதவீதம் வாக்கு கிடைக்கும் என கணிக்கப்பட்டது.
அதில் தவெக 19.20%, திமுக 17.7%, அதிமுக 15.32%, நாதகவுக்கு 6%, காங்கிரஸ் 4.10%, பாமக 4.09%, பாஜக 3.5% என கணிக்கப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் தேமுதிகவின் பெயரே வரவில்லை. எனவே அக்கட்சிக்கு பாஜகவை விட குறைந்த வாக்குகளே கிடைக்கும் என கருதப்படுகிறது.
இதன் மூலம் தேமுதிகவால் திமுக கூட்டணிக்கு எந்த பயனும் இல்லை என்பதும் கண்கூடாக தெரிகிறது. இத்தனை நாளாக அதிமுக கூட்டணியில் இருந்ததில் மொத்தமாக தோல்வியை கண்ட தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்தாவது ஏதேனும் சாதனை படைக்கலாம் என கருதியிருந்த நிலையில் திடீர் இடியாக இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications