இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி.. கேஸ் சிலிண்டர் விலை ரூ 64.50 குறைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: வீட்டு உபயோக சமையல் எரிவாயுவின் விலை ரூ 64.50 குறைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வந்ததால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிப் பொருள்களின் விலை குறைந்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ 826-க்கு விற்பனை செய்யப்பட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து சிலிண்டரின் விலையும் அதிகரித்ததால் இல்லத்தரசிகள் கவலையடைந்தனர்.
இந்த நிலையில் தற்போது சிலிண்டரின் விலை ரூ 64. 50 குறைந்துள்ளது. இதன் மூலம் ரூ. 826-லிருந்து ரூ 761.50 ஆக சிலிண்டர் விலை குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
டெல்லியில் ரூ 61.50, மும்பையில் ரூ 62 விலை குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications