சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாற்றம்?.. வெளியானது புது லிஸ்ட்.. மத்திய அரசின் முக்கிய அட்வைஸ் பாருங்க
சென்னை: தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் விலை பட்டியல் வெளியாகி உள்ளது.. அத்துடன், சமையல் கேஸ் சிலிண்டர் குறித்து முக்கிய அறிவுரை ஒன்றும் தரப்பட்டுள்ளது.
சமையல் கேஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வரும்நிலையில், கடந்த மாதம் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்தது. ஆனால், ஒவ்வொரு மாதமும் சிலிண்டரின் விலை அதிகரிக்கும் பட்சத்தில் பொதுமக்களின் நலன் கருதி வீட்டில் உபயோகப்படுத்தும் சமையல் சிலிண்டருக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

விலைப்பட்டியல்: அந்த வகையில், தமிழகத்தில் எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1118.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.. மற்ற மாநிலத்துடன் ஒப்பிடும் போது தமிழகத்தில், இன்று வீட்டில் உபயோகம் செய்யப்படும் 14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டரின் விலை குறைந்திருக்கிறது.. இதற்கான விலை பட்டியலும் வெளியாகி உள்ளது.
குறிப்பாக, அரியலூரில் சிலிண்டரின் விலை ரூ. 1140க்கும், சென்னையில் ரூ. 1118.50 க்கும், கோயம்புத்தூரில் ரூ.1132க்கும், கூடலூரில் ரூ.1139 க்கும், தர்மபுரியில் ரூ.1141 க்கும், திண்டுக்கல்லில் ரூ.1145 க்கும், ஈரோட்டில் 1137.50 க்கும், கள்ளக்குறிச்சியில் 11450-க்கும், காஞ்சிபுரத்தில் ரூ.1118.50 க்கும், கன்னியாகுமரியில் ரூ.1187 க்கும், கரூரில் ரூ.1157.50 க்கும் என ஒவ்வொரு மாவட்டங்களிலும் மற்ற மாநிலத்தை ஒப்பிடும்போது சிலிண்டரின் விலை குறைந்துள்ளது.
அதுமட்டுமல்ல, பொது மக்களுக்கு சிலிண்டரை டெலிவரி செய்யும் போது பொதுமக்கள் கூடுதலாக எந்தவித தொகையையும் செலுத்த தேவையில்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெலிவரி மேன்கள்: காரணம், இந்த சிலிண்டர் விலையையும் சேர்த்து, சிலிண்டரை டெலிவரி செய்யும் நபர்களுக்கும் பணம் தர வேண்டி உள்ளது.. சிலிண்டர் விலையைவிட, கூடுதலாக 50 ரூபாய் கேட்கிறார்கள் டெலிவரி மேன்கள்.. டெலிவரி கட்டணம் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இதற்கு ஒரு விளக்கமே உள்ளது..
அதாவது, நீங்கள் சிலிண்டரை புக்கிங் செய்தால், உங்கள் வீட்டுக்கே அந்த சிலிண்டரை டெலிவரி செய்வது ஏஜென்சியின் பொறுப்பாகும். டெலிவரி செய்யும் சமயத்தில் பணம் எதுவும் கேட்கப்பட்டால் கொடுக்கத் தேவையில்லை..
அப்படி கேட்கப்பட்டால் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் புகார் தரலாம்.. ஏனென்றால், டெலிவரி மேனுக்கு கொடுக்கும் அந்த கட்டணமானது, நாமாகவே விருப்பப்பட்டு தருவது.. அதை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அப்படி கட்டாயப்படுத்தினால், தாராளமாக வாடிக்கையாளர்கள் புகார் கொடுக்கலாம்.
அட்வைஸ்: ஆனால், இப்போதுவரை, டெலிவரி மேனுக்கு பணம் தரப்பட்டுகொண்டுதான் இருக்கிறது. இது அனைத்து மாநிலங்களிலுமே நடக்கிறது.. இந்நிலையில்தான், மத்திய அரசு அட்வைஸ் ஒன்றினை தந்துள்ளது...
இதுகுறித்து பெட்ரோலிய அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், "சிலிண்டர் எடுத்து வரும் ஊழியர்களிடம் ரசீதில் உள்ள தொகையை தவிர, வாடிக்கையாளர் கூடுதல் பணம் தர கூடாது. சிலிண்டரை வீட்டு வாசலில் வினியோகம் செய்வது கட்டாயமாகும். கேஸ் ஏஜென்சிகளுக்கு சென்று சிலிண்டர் எடுக்கும்போது, அதற்குரிய டெலிவரி தொகையை ஏஜென்சிகளிடம் இருந்து பெற்று கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications