சமையல் கேஸ் + ரேஷன் கார்டு + வங்கி கணக்கு.. ஒரே நேரத்தில் "ஓவர் ஸ்பீடு" எடுத்த தமிழ்நாடு அரசு.. செம
சென்னை: தமிழகத்தில் மகளிருக்கான 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கான வேலைகள் மும்முரமாகி உள்ளன.. அந்தவகையில் 2 வகையான நடவடிக்கைகளில் தமிழக அரசு துரிதமாகி உள்ளது.
பெண்களுக்கு 1000 ரூபாய் அறிவிப்பு குறித்து கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி நிதியமைச்சர் அறிவித்தார்.. மகளிர் உரிமை தொகை மாதம் ஆயிரம் ரூபாய் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பும் வெளியிட்டிருந்தது..

உரிமைத்தொகை: இந்த உரிமைத்தொகையை அரசு எதன்மூலம், எப்படி தரப்போகிறது? நேரடியாகவே வங்கிக்கணக்கு உரிமைத்தொகை சென்றுவிடுமா? என்றெல்லாம் தெரியவில்லை.. மகளிர் உரிமை தொகையை, மாநில தலைமை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் சார்பில், ரேஷன் கடைகளில், மைக்ரோ ஏடிஎம் கருவிகள் வாயிலாக பட்டுவாடா செய்ய, தமிழ்நாடு அரசு நினைக்கிறதாம். அதன்படி, கூட்டுறவு வங்கி கணக்கில் மட்டும், உரிமைத்தொகை செலுத்தப்படும் என்கிறார்கள்.
1000 ரூபாய்: அதாவது, ரூ.1000 உரிமைத்தொகையை ரேஷன் கார்டு மூலமாக பெற்றுக் கொள்ள வேண்டுமா அல்லது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்படுமா? என்பது குழப்பமாகவே இருக்கிறது.. வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டால் EMI உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வங்கிகளில் இருந்து அந்த பணம் நேரடியாக எடுத்துக் கொள்ளப்படும்.
அதேசமயம், ரேஷன் கார்டு வழியாக ரேஷன் கடையிலேயே பெண்களுக்கான உரிமைத்தொகை வழங்கப்பட்டால், அதிலும் கூட பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது என்பதால், 1000 ரூபாய் எப்படி கிடைக்க போகிறது? என்ற குழப்பம் வட்டமடிக்கிறது.
முகாம்கள்: ஆனால், தமிழக அரசோ, தன்னுடைய பணிகளை ஜரூராக துவங்கி செய்து கொண்டிருக்கிறது.. அதன்படி 2 நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.. ஒன்று, வங்கிக்கணக்கு இல்லாதவர்களுக்கு அஞ்சல் கணக்குகளை திறக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதாவது, குடும்பத்தில் வங்கி கணக்கு இல்லாதபட்சத்தில் குடும்ப தலைவி பெயரில் அஞ்சல்துறையில் சேமிப்பு கணக்கு தொடங்க, சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இப்போதைக்கு சேலம் மாவட்டத்தில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.. நேற்றும்கூட முகாம் நடந்தது.. வருகிற 19ம் தேதியும் முகாம் நடக்க போகிறது. சந்தியூர், கம்மாளப்பட்டி, குரால்நத்தம், கோணமடுவு, குள்ளப்பநாயக்கனுார், பனமரத்துப்பட்டி, ஒட்டியூர், தாசநாயக்கன்பட்டி, எருமாபாளையம், சன்னியாசிகுண்டு பகுதிகளில் முகாம்கள் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது..
மகளிர் உரிமைத்தொகை: அதுபோலவே, வரும் 20ம் தேதி, ஆட்டையாம்பட்டி, பெரமனுார், வேங்கம்பட்டி, தீரானுார், மேட்டுத்தெரு, ஜி.கே.கரட்டூர், எருமாபாளையம், அ.கொண்டலாம்பட்டி, எருநாயக்கன்பாளையம், தும்பல்பட்டி ஆகிய இடங்களில் முகாம் நடக்க உள்ளது. எப்படி பார்த்தாலும், செப்டம்பர் மாதம் துவங்குவதற்குள், இந்த முகாம்களை மாவட்டங்களில் நடத்திவிடுவது என்ற முனைப்பில் தமிழக அரசு தீவிரமாகி வருகிறது.
அதேபோல, தமிழ்நாட்டில் 2.24 கோடி குடும்ப ரேஷன் கார்டுகள் செயல்பாட்டில் உள்ளன.. கடந்த மே 2021 முதல் இப்போதுவரை 15 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளது.
வறுமைக்கோடு: வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் ஆதரவற்றோர், முதியோர், கூலி வேலை பார்ப்பவர்கள், நடைபாதை வியாபாரிகள், மீன் விற்பவர்கள் என பலரும் 1000 ரூபாய் உரிமைத்திட்டத்தின்கீழ் பயனடைய உள்ளனர். எனவே, புதிய ரேஷன் கார்டுகள் கேட்டும், விண்ணப்பிக்க துவங்கிவிட்டனர்.. ஆனால், ஒரே வீட்டில் வசிப்பவர் தாய்-தந்தை பெயரில் ஒரு கார்டும், மகன்-மருமகள் பெயரில் இன்னொரு கார்டு கேட்டும் விண்ணப்பித்து வருகிறார்களாம்..
இதனால் உணவு வழங்கல் துறைக்கு புதிய கார்டு கேட்டு வரும் விண்ணப்பங்கள் எக்கச்சக்கமாக பெருகிவிட்டதாம். ஆனால், எல்லாருக்குமே கார்டுகளை தந்துவிடுவதில்லை.. தங்களுக்கு வந்து சேரும் விண்ணப்பங்களில், தகுதியான கார்டுகளை தேர்ந்தெடுக்க விண்ணப்பத்துடன் இணைத்திருக்கும் ஆவணங்கள் சரியாக உள்ளதா? என்பதையெல்லாம் அதிகாரிகள் முதலில் ஆய்வு செய்கிறார்கள்.. அதன் பிறகு, சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தாரரின் முகவரிக்கு நேரடியாகவே சென்று, வீட்டை ஆய்வு செய்கின்றனர்.

2 சிலிண்டர்: அந்த வீட்டில் கிச்சன் ஒன்று உள்ளதா? அல்லது 2 உள்ளதா? அடுப்பு ஒரு அடுப்பா? 2 அடுப்பா? யார் பெயரில் உள்ளது? ஒரு கேஸ் சிலிண்டரா? 2 கேஸ் சிலிண்டரா? அது யார் பெயர்களில் உள்ளது? என்பதையெல்லாம் நேரில் சென்று பார்த்து வருகிறார்களாம். இவை அனைத்தையும் சரிபார்த்த பிறகே புதிய ரேஷன் கார்டுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்து வருகிறார்கள்.
இரண்டு பணிகள்: இந்த ஆய்வுப் பணிக்கு ஊழியர்கள் சென்று வருவதால் விசாரித்து முடித்த பிறகே புதிய ரேஷன் கார்டு அச்சிடப்படுகிறது என்கிறார்கள்.. எனவே, இந்த ஆய்வுகள் முடியவே, எப்படியும் 3 மாத காலம் ஆகும் என்றும் சொல்கிறார்கள்.. எப்படி பார்த்தாலும், ஒருபக்கம் அஞ்சலக முகாம்கள் மற்றொருபக்கம் ரேஷன் கார்டு ஆய்வுகள் என தமிழக அரசு தன்னுடைய துரிதப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
வீட்டு சிலிண்டர் 14.2 கிலோவுக்கு பதில் இனி 10 கிலோ.. மொத்தமாக மாறப்போகுதா.. மத்திய அரசு விளக்கம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications