சிலிண்டர் விலை குறையுதா.. கரண்ட் பில் வேற.. கிலி தரும் "விலைவாசி".. ஹோட்டலில் உணவு விலையும் கூடுகிறது
சென்னை: எகிறி கொண்டிருக்கும் விலைவாசி உயர்வுக்கு நடுவே, ஓட்டல் ஓனர்கள் தரப்பில் முக்கிய கோரிக்கை அரசுக்கு வைக்கப்பட்டுள்ளது. இது பலரது கவனத்தையும் திருப்பி வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. காய்கறிகள் விலையோ அதற்கு மேல் உயர்ந்து கொண்டிருக்கிறது.. இதற்கு நடுவில் மளிகை பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துவிட்டதால், நடுத்தர மக்கள் விழிபிதுங்கி போய் உள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்: அதனால்தான், இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் விரிவான ஆலோசனையை மேற்கொண்டிருந்தார்..
"யாரெல்லாம் அத்தியாவசிய பொருட்களை பதுக்குகிறார்களோ, அவர்கள் மீதெல்லாம் கடும் கடுமையான நடவடிக்கை எடுங்கள்" என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்... இப்போதைக்கு 302 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட்டு வருகிறது.. ஆனாலும் மற்ற காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் விலையோ உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.
என்ன காரணம்: இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு முயற்சிகள் மேற்கொண்டுவந்தாலும்கூட, மளிகை பொருட்கள் விலையை குறைக்க முடியவில்லை.. காரணம், வட மாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாக காய்கறி-மளிகை பொருட்கள் போதிய வரத்து இல்லை என்பதுதான், காய்கறி, மளிகையின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்கிறார்கள்..
இந்த விலை உயர்வு காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் காய்கறிகளை பார்த்து பார்த்து வாங்கி பாதுகாத்து பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் ஹோட்டல் உரிமையாளர்களும் விழிபிதுங்கி வருகிறார்கள். இதன்காரணமாக, ஓட்டல் பொருட்களின் விலையும் உயர போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வணிக பயன்பாட்டுக்கான மின்சார கட்டணமும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் ஓட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் கடும் சுமையை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்... ஏற்கனவே, மின் கட்டணத்துக்காக 40 சதவீதம் அளவுக்கு கூடுதலாக செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக புலம்பும் ஹோட்டல் உரிமையாளர்கள், வணிக சிலிண்டர்களின் விலை 8 ரூபாய் அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்..
சமையல் கேஸ்: ஆக, காய்கறி + கரண்ட்பில் + கேஸ்விலை + காய்கறி விலை + தக்காளி விலை + மளிகை பொருட்கள் விலை என அனைத்தும் சேர்ந்து, சமையல் செய்வதற்கான செலவை அதிகப்படுத்திவிட்டதாக கலங்கி சொல்கிறார்கள்.. 1500 பேருக்கு சமையல் செய்ய 10 சிலிண்டர்கள் தேவையாக உள்ளது.. ஆனால், இப்போதைய விலை உயர்வால் ஒரு நாளைக்கு ரூ.80 கூடுதல் செலவு ஆகிறது என்றும், மாதத்துக்கு 2500 ரூபாய் வரை சமையல் செலவு அதிகரித்து இருப்பதால் இது சுமையாக உள்ளதாம்.
ஒருசில நாட்களில் இந்த விலையெல்லாம் குறைந்துவிடும் என்று ஓட்டல் ஓனர்கள் காத்திருந்த நிலையில், கடந்த 15 நாட்களாக உப்பு தவிர அனைத்து உணவு தானியங்கள், எண்ணெய், பருப்பு வகைகள் விலை கூடியுள்ளதால் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளதாம்.. அதனால், ஓட்டல் உணவு பண்டங்களில் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார் சென்னை ஓட்டல்கள் சங்க தலைவர் ரவி தெரிவித்துள்ளார்.
பீக் ஹவர்ஸ்: தொடர்ந்து அவர் சொல்லும்போது, இந்த விலை உயர்வுக்கு ஒரு மாதம் தாக்குபிடிக்க முடியுமா என்பதே சந்தேகம்தான்.. தொடர்ந்து எல்லா வகையிலும் ஓட்டல் தொழில் பாதித்து வருகிறது. ஓட்டல்களுக்கு காலை மற்றும் மாலை பீக் அவர்ஸ் என கணக்கிட்டு மின்சார கட்டணம் இந்த மாதம் முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மின்சார கட்டணம் பல மடங்கு அதிகரிக்கும்.
லாரி வாடகை, டீசல் விலை உயர்வே விலை ஏற்றத்துக்கு காரணம். அதனால், அரசு ஓட்டல்களுக்கான "பீக் ஹவர்ஸ்" மின் கட்டண முறையை ரத்து செய்ய வேண்டும். அப்போது தான் தொழில் செய்ய முடியும்.
ஓட்டல் உணவு: அதனால், இந்த மாதம் இறுதி வரை காய்கறிகள், மளிகை பொருட்கள் விலை எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்துதான் அடுத்த மாதம் ஓட்டல் உணவு பண்டங்களின் விலையை உயர்த்த முடிவு செய்வோம். இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல், பூரி மற்றும் சாப்பாடு ஆகியவற்றின் விலையை மேலும் அதிகப்படுத்தினால் வியாபாரம் பாதிக்கும் என்று கருதுகிறோம். ஆனால் தொடர் விலை உயர்வால் நஷ்டத்தை ஈடு செய்ய முடியாது" என்கிறார் சென்னை ஓட்டல்கள் சங்க தலைவர் ரவி.
சிலிண்டர் விலையை பொறுத்தவரை, கடந்த முறை வர்த்தக எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டதால், எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலையில் இந்த மாத துவக்கத்தில் பெரும் சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக சொன்னார்கள்.. மேலும், எல்பிஜி எரிவாயு விலையில் தொடர்ந்து எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இருப்பதாலும், விரைவில் எம்பி தேர்தல் நடக்க உள்ளதாலும், மக்களுக்கு சிலிண்டர் விலை குறைப்பு போன்ற திட்டத்தை அரசு கையில் வைத்திருக்கலாம் என்றார்கள்.
சிலிண்டர்: ஆனால், அப்படி எதுவுமே அறிவிப்பு வராத நிலையில், இந்த சிலிண்டர் விலை குறைப்பு குறித்தும் எதிர்பார்ப்புகள் எகிறி வருகின்றன.. ஆக, கரண்ட் பில் + கேஸ் சிலிண்டர் + காய்கறி + மளிகை + என எல்லாமும் சேர்ந்து, சாப்பாட்டு விஷயத்தில் "கை" வைத்துவிட்டதாகவே எளிய எளிய மக்கள் கலங்கி சொல்கிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications