இனிமேல் வெறும் ரூ.724.. இலவச கேஸ் சிலிண்டர் விலை பாருங்க.. ஹோலி ஹேப்பி.. எல்பிஜி சர்ப்ரைஸ்.. சூப்பர்
சென்னை: விரைவில் எம்பி தேர்தல் நெருங்கும் சூழலில், பாஜக அரசு பல்வேறு அதிரடிகளை முன்னெடுத்து வருகிறது. அந்தவகையில், ஒரு சூப்பர் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
"பிரதமரின் உஜ்வாலா யோஜனா" திட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு சமையல் சிலிண்டர் வழங்கப்படுகிறது. சிலிண்டர் பெறுவதற்கான வைப்புத் தொகை உட்பட ரூ.1,600-ஐ மத்திய அரசே வழங்குகிறது. இதில் கோடிக்கணக்கான மக்கள் பலனடைந்து வருகிறார்கள். இந்த திட்டத்தின்படி, காஸ் அடுப்பும், முதலாவது சிலிண்டரும் பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.

இணைப்புகள்: பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் இதுவரை , 9 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கேஸ் அடுப்பு, அதற்கான டிபாசிட் தொகை, ரப்பர் குழாய், ரெகுலேட்டர் போன்றவையும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இப்படிப்பட்ட சூழலில், விரைவில் எம்பி தேர்தல் வர உள்ளது.. இதனால், பொதுமக்களை கவர, பாஜக அரசு பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு அறிவிப்பு வெளியாகியிருந்தது.
ஹோலி பண்டிகை: அதன்படி, அம் மாநிலத்தின் தகுதியுள்ள 1.75 கோடி குடும்பங்களுக்கு பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச எல்பிஜி சிலிண்டர் வழங்க உள்ளதாக முதல்வர் யோகி அறிவித்திருந்தார். அதுமட்டுமல்ல, ஹோலி பண்டிகையின்போது, வருடத்துக்கு 2 முறை இலவச எல்பிஜி சிலிண்டர்களை வழங்க அரசு திட்டமிட்டு வருகிறதாம்.. இதற்காகவே உ.பி. அரசு ரூ.2,312 கோடி செலவு செய்யவதாகவும் அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இந்நிலையில், ஹோலி பண்டிகையை முன்னிட்டு இல்லத்தரசிகளுக்கு ஆறுதலான செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது.. அதன்படி, வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.150 குறைக்கப்பட்டுள்ளது.. இந்த சலுகையின் கீழ், வீட்டு எரிவாயு சிலிண்டர்களுக்கு ரூ.150 வரை குறைக்கப்பட்டு, அதாவது ரூ.874க்கு கிடைக்கும் கேஸ் சிலிண்டரை ரூ.724க்கு வாங்கலாம் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அகவிலைப்படி: ஏற்கனவே அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியது... பிறகு, சாமானிய மக்களுக்கு நிவாரணம் அளித்து பெட்ரோல், டீசல் விலையை 2 ரூபாய் குறைத்து நாடு முழுவதும் அறிவிப்பை வெளியிட்டது.. இப்போது ஹோலி பண்டிகையை முன்னிட்டு சிலிண்டர் விலையும் குறைக்கப்பட்டுள்ளது, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
தேர்தல் நெருங்கும் நேரத்தில், மத்திய அரசு முன்னெடுத்து வரும் இதுபோன்ற அதிரடிகள், நிச்சயம் பொதுமக்களின் ஆதரவை அபரிமிதமாகவே பெற்றுத்தரும் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications