இன்று முதல் உயர்ந்தது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை... வெளியான புதிய விலை விவரம்
சென்னை: ஆகஸ்ட் 1ம் தேதியான இன்று முதல் நாடு முழுவதும் வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது. புதிய விலை என்ன என்பது குறித்து பார்ப்போம்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைப்பபது வழக்கம். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் சிலிண்டர் விலையும் கணிசமாக உயரும். அதேபோல் விலை குறைந்தால், சிலிண்டர் விலையும் குறையும். ஆனால் தினசரி இந்த மாற்றம் இருக்காது. எனினும் ஒவ்வொரு மாதமும் அந்த வகையில் 1-ந்தேதி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிப்பது வழக்கம் ஆகும்.

அந்த வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் வந்துள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது வர்த்தக சிலிண்டர் விலை சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சிறிய அளவில் உயர்ந்துள்ளது. சென்னை பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,809.50 ஆக இருந்த நிலையில், இன்று முதல் 7 ரூபாய் 50 காசுகள் உயர்ந்துள்ளது.
இதன்படி சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் 1,817 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதேபோல் தான் டெல்லி, மும்பை, பெங்களூர், கொல்கத்தா உள்பட எல்லா நகரங்களிலும் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை சற்று உயர்த்தப்பட்டுள்ளது.
அதே நேரம் சென்னையில் வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதனால் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.818.50 என்ற அளவிலேயே சென்னையில் இந்த மாதம் முழுவதும் விற்கப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை தேர்தலுக்கு முன்பு இருந்தே எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது. கடைசியாக பிரதமர் நரேந்திரமோடி சிலிண்டர் விலையை 100 ரூபாய் அளவிற்கு கடந்த மார்ச் மாதம் குறைத்தார்.












Click it and Unblock the Notifications