சென்னையில் ரூ.3237க்கு போன வணிக சிலிண்டர் விலை..ஒரே நாளில் ரூ.993 உயர்வு! வீட்டு கேஸ் சிலிண்டர் விலை என்ன?
சென்னை: வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் 19 கிலோ வணிக பயன்பாடு சிலிண்டர் ரூ.993 உயர்ந்து, ரூ.3071க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை சென்னையில் ரூ.968 உயர்ந்து ரூ.3237க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை.
ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி கேஸ் சிலிண்டர் விலை எப்போது மாற்றி அமைக்கப்படும். வளைகுடா போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், இதனால் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கேஸ் விலை உயரலாம் என்று அஞ்சப்பட்டது.

இதற்கிடையே மே 1ம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. டெல்லியில் 19 கிலோ வணிக பயன்பாடு சிலிண்டர் ரூ.993 உயர்ந்துள்ளது. இதனால் டெல்லியில் இப்போது வணிக பயன்பாடு சிலிண்டர் ரூ.3071.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை சென்னையில் ரூ.968 உய்ரந்து ரூ.3237க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை.!












Click it and Unblock the Notifications