ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் போர் சூழ்நிலை காரணமாக உலகளவில் எண்ணெய் மற்றும் சமையல் கேஸ் விநியோகத்தில் பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியாவுக்கு மகிழ்ச்சி தரும் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. சமையல் கேஸ் ஏற்றிக் கொண்டு மேலும் 2 இந்திய கப்பல்கள் தற்போது ஹார்முஸ் நீரிணையை கடக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரு கப்பல்களும் ஒன்றுக்கு ஒன்று அருகருகே பாதுகாப்புடன் பயணம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் 28ஆம் தேதி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, அந்தப் பகுதி முழுவதும் பதற்றம் அதிகரித்தது. இந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக, உலகளவில் மிக முக்கியமான கடல் மார்க்கமாக கருதப்படும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் தற்காலிகமாக முடக்கியது.

iran india LPG

இந்த நீரிணை வழியாகத்தான் எண்ணெய் உற்பத்தி நாடுகளில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. இந்த பாதை தடை செய்யப்பட்டதன் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் கியாஸ் விநியோகத்தில் சிக்கல்கள் உருவாகின.

ஹார்முஸ் நீரிணை

குறிப்பாக இந்தியாவுக்கு சமையல் கேஸ் கொண்டு வரும் கப்பல்கள் பல நடுவழியில் சிக்கிக்கொண்டன. போர் தொடங்கிய சமயத்தில், ஹார்முஸ் நீரிணை அருகே மொத்தம் 28 இந்திய கப்பல்கள் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதில் நீரிணையின் மேற்கு பகுதியில் 24 கப்பல்களும், கிழக்கு பகுதியில் 4 கப்பல்களும் காத்திருந்தன. இந்த நிலையில், இந்திய அரசின் ராஜதந்திர முயற்சிகள் பலன் அளித்ததாக கூறப்படுகிறது. அதன் விளைவாக, ஐஎன்எஸ் சிவாலிக் மற்றும் ஐஎன்எஸ் நந்தா தேவி உள்ளிட்ட இந்திய கப்பல்களுக்கு சமீபத்தில் ஹார்முஸ் நீரிணையை கடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இந்தியா எல்பிஜி கப்பல்கள்

அந்த கப்பல்கள் சுமார் 92 ஆயிரத்து 712 டன் சமையல் கியாஸ் ஏற்றிக்கொண்டு பாதுகாப்பாக குஜராத் மாநில துறைமுகங்களுக்கு வந்து சேர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில், தற்போது மேலும் இரண்டு இந்திய கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை கடக்கத் தொடங்கியுள்ளன. பின் கேஸ் மற்றும் ஜாக் வசந்த் என்ற பெயருடைய இந்த இரு கப்பல்களும் சமையல் கியாஸ் ஏற்றிக்கொண்டு நேற்று பாரசீக வளைகுடா பகுதியில் இருந்து பயணத்தை தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேஸ் விநியோகம்

பாதுகாப்பு காரணங்களால், இந்த இரு கப்பல்களும் அருகருகே பயணம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. கப்பல் நடமாட்ட கண்காணிப்பு தரவுகளின்படி, இந்த கப்பல்கள் தற்போது லராக் தீவு மற்றும்
கேஷ்ம் தீவு ஆகிய தீவுகளுக்கு இடையிலான கடல் பகுதியில் வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்களது அடையாளம் தெளிவாக தெரியும் வகையில் கப்பல்கள் பயணம் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் இந்தியா

மத்திய கிழக்கு பகுதியில் நீடித்து வரும் பதற்ற சூழ்நிலையில், இந்திய கப்பல்கள் பாதுகாப்பாக ஹார்முஸ் நீரிணையை கடந்து செல்லும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது இந்தியாவுக்கு முக்கியமான நிம்மதியை அளித்துள்ளது. குறிப்பாக சமையல் கேஸ் விநியோகம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகள் அடுத்த சில நாட்களில் மேலும் பல கப்பல்கள் பயணம் தொடங்கும் வாய்ப்பும் இருப்பதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+