பிரபாகரன் மனைவி, மகள் உயிருடனே இல்லை..ஆனாலும் வருவார்கள்.. புதிர் போடும் விடுதலைப் புலிகள்
பிரபாகரன் மனைவி, மகள் தொடர்பாக விடுதலைப் புலிகளின் தயா மோகன் குழப்பமான பதில் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதினி, மகள் துவாரகா வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் செய்திகளை அந்த இயக்கத்தின் மாஜி போராளி தயா மோகன் மறுத்துள்ளார். அதே நேரத்தில் பிரபாகரன் மனைவி, மகள் என ஒருவரை நவீன தொழில்நுட்பம் மூலம் அடையாளம் காட்டக் கூடிய சாத்தியங்கள் உள்ளது எனவும் தயா மோகன் கூறியுள்ளார்.
பிரபாகரன் மனைவி, மகள் தொடர்பாக பிபிசி ஊடகத்துக்கு தயா மோகன் அளித்த பேட்டி: 2009ல் பிரபாகரன் மரணமடைந்தபோது அவர் யாரோடு தொடர்பில் இருந்தாரோ, அவர்களோடுதான் இப்போதும் தொடர்பில் இருந்து கொண்டிருக்கிறார்கள். புலம்பெயர் தேசங்களில், பிரபாகரன், மனைவி மதிவதனி, மகள் துவாரகா ஆகியோர் உயிரோடு இருப்பதாக சில பிம்பங்களை உருவாக்கி நிதி வசூலிக்கிறார்கள். அதைச் செய்வது யாரென்றால் 2009ல் யார் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக நெடுமாறனை நம்ப வைத்தார்களோ, அவர்களேதான் இப்போதும் நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு முழுக்க முழுக்க அவரைக் குற்றம்சொல்ல முடியாது என்றாலும், கடந்த 13 ஆண்டுகள் அவர் நடந்தது என்ன என்பதை பகுத்தறிந்திருக்க வேண்டும்.

மகள் பிரபாகரனுக்கு முன்பே இறந்துவிட்டார். அவர் உரிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டார். ஆகவே அவரது உடலைக் காட்ட முடியாது. மதிவதனியைப் பொறுத்தவரை, பிரபாகரன் கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்போ, சில மணி நேரங்களுக்கு முன்போ அவரும் கொல்லப்பட்டார். பாலச்சந்திரன் மட்டும்தான் ஒரு சில போராளிகளுடன் போய் சரணடைந்தார். அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பிரபாகரன் வருவார் என அவர் இத்தனை ஆண்டு காலமாக சொல்லிக் கொண்டிருந்தபோது நாங்கள் பொறுமையாகவே இருந்தோம். ஏனென்றால், பிரபாகரன் இருக்க வேண்டுமென அவர் விரும்புகிறார், அதனால் அப்படிச் சொல்லிக்கொண்டிருக்கிறார். நீண்ட காலமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்காகவும் தமிழீழ விடுதலைக்காக பாடுபட்டவர் அவர் என்ற முறையில் அதைக் கடந்து சென்றோம்.

ஆனால், இப்போது செய்திருப்பது பிரபாகரனின் பெயரையே (Legacy) இல்லாமல் செய்வதற்கான ஒரு முயற்சியாகத்தான் இதைப் பார்க்கிறோம். பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என யார் சொன்னால் நம்புவார்களோ அவரை வைத்து சொல்ல வைத்திருக்கிறார்கள். இந்த முயற்சியை எடுத்தவர்களின் பிம்பங்கள் புலம்பெயர் தேசங்களில் உடைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பரிலேயே இதற்கான முயற்சியை மேற்கொண்டார்கள். சிலரை ஏமாற்றி நிதியும் பெற்றார்கள். அது இங்குள்ள சில அமைப்புகளாலும் தனி போராளிகளாலும் அம்பலப்படுத்தப்பட்டது. அந்த செய்தியை இப்போது நம்ப வைக்க வேண்டுமென்றால், அதை ஒரு நம்பிக்கைக்குரிய ஒருவரை வைத்து சொல்ல வேண்டும் என்பதற்காக இதைச் செய்திருக்கிறார்கள். வேறு எந்தக் காரணமும் இல்லை. ஆனால், இதற்குப் பின்னால் உள்ள ஆபத்தை காசி ஆனந்தனும் நெடுமாறனும் உணரவில்லை.
ஆனால் பிரபாகரன் மனைவி, மகள் போல வேறு சிலரை அடையாளம் காட்டக் கூடிய தொழில்நுட்பம் இப்போது வந்திருக்கிறது. இவற்றை வைத்து அதைச் செய்வார்கள். இவ்வாறு தயா மோகன் கூறியுள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications