"லப்பர் பந்து" ஏன் தியேட்டரில் மிஸ் செய்யக் கூடாத படம்? "நறுக்கென்று" 4 காரணங்கள்!
சென்னை: அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வாசிகா, பால சரவணன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலரின் நடிப்பில், அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், கடந்த செப்டம்பர் 20ம் தேதி ரிலீசான திரைப்படம் "லப்பர் பந்து" (Lubber pandhu).
அறிமுகமில்லாத இயக்குநர்.. விஜய், அஜித், சூர்யா போல டாப் பிரிவு ஸ்டார் அந்தஸ்தில் இல்லாத நடிகர்கள்.. பத்தோடு பதினொன்றாக ஒரு ஸ்போர்ட்ஸ் படம்போல.. இப்படித்தான், பலரும் லப்பர் பந்து படம் பற்றி சாதாரணமாக நினைத்து கொண்டிருந்தார்கள். ஆனால் 2024ம் ஆண்டின் மிகச் சிறந்த படமாக அது இருக்கப்போகிறது என்பதை அவர்களும் புரிந்துகொள்ள ரொம்ப நாட்கள் எல்லாம் எடுக்கவில்லை. ஒரு வாரத்திலேயே ஊர் முழுக்க லப்பர் பந்து பற்றிதான் பேச்சு.
ஏன் இந்த படம் இன்றுவரை ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது..? ஏன் வெற்றிமாறன் உள்ளிட்ட படைப்பாளிகள் தமிழரசனுக்கு போன் போட்டு பாராட்டினார்கள். தரணி ஏன், "குட்டி கில்லி" என சொன்னார்..? ஏன், மக்கள், ஒருமுறை அல்ல, பல முறை தியேட்டர் போய் இந்த படத்தை பார்த்து, முதல் முறையாக பார்ப்பதை போல சிலாகிக்கிறார்கள்..? இதற்கு ஒரே ஒரு காரணத்தை பதிலாகச் சொல்லிவிட முடியாது.

பல காரணங்கள் படத்தில் உண்டு. அதில் பலராலும் சிலாகிக்கப்படும் அல்லது கவனிக்க மறந்திருந்தால் கவனம் கொடுக்க வேண்டிய நச்சென்று நான்கு அம்சங்களை மட்டும் பட்டியலிடுகிறோம் பாருங்கள்..
நேட்டிவிட்டி: கடலூர் மாவட்டத்தின் நிலவியலை, சென்னைக்கு பக்கத்தில் கூடுவாஞ்சேரி, ரெட் ஹில்சில் சூட்டிங் நடத்தியே கொண்டுவந்துவிட்டதை, மட்டும் நேட்டிவிட்டி என குறிப்பிடவில்லை. கிரிக்கெட் ஆட்டத்தையே நேட்டிவிட்டியாகத்தான் காட்டியிருக்கிறது லப்பர் பந்து. லுங்கியை ஏத்திக் கட்டிக்கொண்டு விளையாடும் நம்மூர் கிராமப்புற இளைஞர்களை சாயம் பூசாமல் சாட்சியாக காட்டிவிட்டார்கள். அங்கு யாரும் ப்ரபஷனல் ப்ளேயர்கள் கிடையாதுதான்.
மாணவனாகவோ, விவசாயியாகவோ, ஜெராக்ஸ் கடை வைத்திருப்பவராகவோ, ஏன் பெயிண்டராகவோ இருப்பார்கள். ஆனால், விளையாட்டு நேரத்தில், மைதானத்தில் ஒன்று கூடுவார்கள். 'சென்னை 28'-க்கு பிறகு இதை "ராவாக" காட்டியுள்ள படம், இது. நிலக் கடலைக்கு பதிலாக, "மல்லாட்டை" என்று சொல்லும், தமிழ்நாட்டின், மத்திய மண்டல பேச்சு வழக்கை, பாடல் வரிகளில் பயன்படுத்தியபோதே, இயக்குநரின் சீரியஸ்நஸ்ஸை புரிந்துகொள்ளலாம்.

நாஸ்டால்ஜியா: 90ஸ் கிட்ஸ், தங்களை படத்தோடு தொடர்புபடுத்திக்கொள்ள ஏகப்பட்ட அம்சங்கள். "ராசிதான் கை ராசிதான்.." என டவுன் பஸ்சில் பாடல் ஒலிக்க தொடங்கும் காட்சியாகட்டும், விஜயகாந்த் ரசிகராக சுற்றும் ஹீரோவின், பைக் முதல் வீடு வரை எங்கும் நிறைந்திருக்கும் "கேப்டனின்" இளமை கால போட்டோக்களும், பாடல்களாகட்டும்.. விஜயகாந்த்துக்கு மட்டும் ட்ரிப்யூட் தரவில்லை, உங்கள் இளமைக் காலத்திற்கும்தான்.
போதாத குறைக்கு, லார்ட்ஸ் மைதானத்தில் கங்குலி சட்டையை கழற்றி சுற்றும் போட்டோவை வரைந்து வைத்து புல்லரிக்க விடுகிறார்கள். அப்பப்போ, பஸ் ஸ்டாண்டுகளில் ஒலிக்கும் 90ஸ் பாடல்கள், தினேஷுக்காக போடப்படும், "நீ பொட்டு வைத்த தங்ககுடம்" பாட்டு என, போதும்போதும் எனும் அளவுக்கு நாஸ்டால்ஜியாவை, நான்-ஸ்டாப்பாக, விருந்து படைத்துள்ளார்கள்.

உணர்வு குவியல்: எல்லா வகை உணர்வுகளையும் படத்திற்கு உரமாக போட்டுள்ளார் இயக்குநர். கணவன் மனைவி அன்பு, நட்பு, காதல், குடும்ப பாசம் என அனைத்திலும் 100 மார்க் கொடுக்கும் காட்சியமைப்புகள்.. அனைத்து கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுத்தில் கொண்டுவந்தது என, அதகளம் செய்துள்ளார் தமிழரசன் பச்சமுத்து.
எந்த அளவுக்கு கனெக்ஷனை கரண்ட் மாதிரி இயக்குநர் பாஸ் செய்துள்ளார் என்றாால், நீங்கள், 90ஸ் கிட்சாக இருந்தால் தினேஷ் டீமுக்காகவும், 2கே கிட்சாக இருந்தால் ஹரீஷ் டீமுக்காகவும் மனதளவில் மைதானத்தில் ஆடிக்கொண்டிருப்பீர்கள். வெல்ல வேண்டும் என்று நினைப்பீர்கள். அந்த அளவுக்கு உங்களை பர்சனலாக கனெக்ட் செய்யும் கேரக்டர் ஆர்க்.

ஏன் தியேட்டரில் பார்க்க வேண்டும்?: ஓடிடியில் வரும்வரை காத்திராமல் தியேட்டருக்கு சென்று திரும்ப திரும்ப ரசிகர்கள் பார்க்க காரணம், அந்த கொண்டாட்ட மனநிலைதான். "பொட்டு வைத்த தங்கக்குடம்.." பாடல் வரும்போதெல்லாம் உங்கள் கைகள் வாயை நோக்கி நகரும் விசிலடிக்க. உங்களை போலவே பல நூறு விசில் சத்தம் மொத்தமாக கேட்கும். இந்த, ஒத்த இசைவுக்காகத்தான், மொத்தமாக தியேட்டர்கள் நிரம்புகின்றன.
கார்க் பாலில் தினேஷ் தடுமாறும்போது, நீங்களே தடுமாறியதை உணர்வீர்கள். ஈகோவையும், கால் பேடையும் தூக்கிப்போட்டுவிட்டு, தினேஷ் வீறு கொண்டு எழும்போது நீங்கள் சீட்டை விட்டு துள்ளி குதிப்பீர்கள். எவ்ளோ நல்லவங்கப்பா, இவர்கள் காதல் ஒன்று சேரனுமே என கடவுளை கூட வேண்டிக்கொள்வீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, எப்போதுமே திரையை விட்டு கண்ணை நகர்த்த முடியாத காட்சியமைப்புகள் வரிசை கட்டிவருவதால், வீட்டில் அந்த அனுபவம் சாத்தியமில்லை.

-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications