50 கிடா வெட்டி பிரியாணி விருந்து! அரசு பள்ளி மாணவிகளுக்கு இன்ப அதிர்ச்சி! நெகிழ வைத்த ஊராட்சி தலைவர்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அய்யப்பாக்கம் ஊராட்சியின் தலைவராக இருக்கும் வீரமணி, தனது சொந்த செலவில் பொதுத்தேர்வு எழுத இருக்கும் சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு சுடச்சுட பிரியாணி வழங்கினார். சுமார் 50 ஆடுகள் இதற்காக வெட்டப்பட்டன. மேலும் மாணவிகளுக்கு பென்சில், பேனா போன்ற பொருட்களும் வழங்கப்பட்டன.
தமிழகத்தில் எஸ்.எல்.சி, பிளஸ் டூ உள்ளிட்ட வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மார்ச் மாதம் முதல் பொதுத்தேர்வு தொடங்கப்படவுள்ளது. தேர்வு நெருங்கி வருவதால் மாணவ- மாணவிகள் தேர்வினை எதிர்கொண்டு நல்ல மதிப்பெண்கள் பெற ஆயத்தமாகி வருகிறார்கள். பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவ மாணவிகளுக்கு அச்சத்தை போக்கும் விதமாக பள்ளிகளிலேயே பல்வேறு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

சில இடங்களில் தன்னார்வ அமைப்புகளும் மாணவ மாணவியர்களுக்கு இத்தகைய விழிப்புணர்களை அளித்து வருகின்றன. ஆசிரிய பெருமக்களும் தங்கள் மாணவ செல்வங்களுக்கு தேர்வை நல்ல முறையில் எழுத இறுதி கட்ட பயிற்சி கொடுத்து வருகிறார்கள்.
இதனிடையே, திருவள்ளூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் அய்யப்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் பங்கேற்று மாணவிகள் அச்சமின்றி பதட்டம் அடையாமல் தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்களை ஸ்கோர் செய்வது எப்படி என ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் முடிவில் மாணவிகளுக்கு சுவையான மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. சுமார் 1,500 மாணவிகள் பொதுத்தேர்வு எழுத இருக்கும் நிலையில், அத்தனை பேருக்கும் சுடச்சுட மட்டன் பிரியாணி பரிமாறப்பட்டது. அதன்பிறகு மாணவிகளுக்கு தேர்வு எழுதவற்கான பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்களையும் வழங்கினார்.
அப்போது, மாணவிகள் மத்தியில் பேசிய ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி, மாணவிகள் பயமின்றி மகிழ்ச்சியோடு சந்தோஷமாக சிரித்த முகத்தோடு தேர்வு எழுத வேண்டும்" என்றும் அறிவுரை வழங்கினார். பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளுக்கு சுவையான மட்டன் பிரியாணி வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் வீரமணியை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் அய்யப்பாக்கம் ஊராட்சியின் தலைவராக இருக்கும் வீரமணி, தனது சொந்த செலவில் இந்த ஏற்பாடுகளை செய்து இருந்தார். அதாவது, மாணவிகளுக்கு மதிய உணவாக பிரியாணி விருந்து அளிப்பதற்காக சுமார் 50 ஆடுகள் வெட்டப்பட்டன. மாணவிகளுக்கு சுடச்சுட பிரியாணி வழங்கிவிட்டு அறிவுரைகளையும் கூறினார் வீரமணி.
பஞ்சாயத்து தலைவர் வீரமணியின் இந்த செயலை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகிறார்கள். சமூக வலைத்தளங்களிலும் நெட்டிசன்கள் பஞ்சாயத்து தலைவரின் சமூக பணிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் கூறி வருகிறார்கள். அய்யப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஆண்கள் பள்ளியிலும் மாணவர்களுக்கு இதே போன்ற நிகழ்ச்சி அவர் திட்டமிட்டுள்ளாராம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications