"லிடியன்" மேஜிக் செய்துவிட்டார்.. வியந்து பார்த்து வெளிநாட்டினர்! சிலிர்த்த ரஜினி! சுவாரசிய சம்பவம்!
சென்னை: செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் மேடையில் இன்று லிடியன் பியானோ வாசித்து அசத்தினார். வெளிநாட்டினர் பலர் இவரின் வாசிப்பு திறமையை பார்த்து சிலிர்த்து போனார்கள்.
Recommended Video
சென்னை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள போர் பாயிண்ட் நட்சத்திர விடுதியில் நடக்க உள்ளது. இன்று முதல் ஆகஸ்டு மாதம் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்கான தொடக்க விழா இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் விழா நடைபெற்று வருகிறது.

பாரம்பரியம்
இன்று நடைபெற்ற தொடக்க விழாவில் தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிக்காட்டும் வகையில் பல கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முதலில் நடைபெற்ற மணல் ஓவியத்தில் இருந்து வரிசையாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் விமான படைத்தளத்திற்கு வந்து பின்னர் அங்கிருந்து விழா நடக்கும் இடத்திற்கு காரில் பிரதமர் மோடி வருகை புரிந்தார்.

மோடி
வெள்ளை வேட்டி சட்டையில், செஸ் போர்ட் போன்ற தோற்றம் கொண்ட துண்டு அணிந்து பிரதமர் மோடி மேடைக்கு வந்தார். அதேபோல் முதல்வர் ஸ்டாலின் மஞ்சள் கலந்த பட்டு உடை அணிந்து இருந்தார். இந்த விழாவில் செஸ் விளையாட்டு வீரர்கள், 187க்கும் அதிகமான வெளிநாட்டு பிரதிநிதிகள், நடிகர்கள் ரஜினிகாந்த், கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விழா மேடையில் பிரதமர் மோடி, அமைச்சர் அனுராக், முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அமர்வதற்கு மட்டும் மேடை போடப்பட்டு இருந்தது.

லிடியன்
இந்த நிலையில் மேடையில் இன்று லிடியன் பியானோ வாசித்து அசத்தினார். தொடக்கத்தில் லிடியன் கண்ணை கட்டிக்கொண்டு நாதஸ்வரம் வாசித்தார். பின்னர் இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் இரண்டு பியானோ வாசித்தார். தொடக்கத்தில் மெதுவாக வாசித்தவர் அப்படியே நேரம் செல்ல செல்ல வேகத்தை கூட்டினார். இவர் வாசித்ததை பார்த்தது அங்கு அமர்ந்து இருந்தவர்கள் பலரும் மெய் சிலிர்த்து போனார்கள். ரஜினி, கார்த்தி ஆகியோரும் இதை பார்த்து வியந்து போனார்கள்.

பியானோ
முக்கியமாக வெளிநாட்டு வீரர்கள் அவர்களின் பிரதிநிதிகள் இவர் பியானோ வாசிப்பதை பார்த்து சிலிர்த்து போனார்கள். ஒரு கையில் ஹாரி பாட்டர் மற்றும் மற்றொரு கையில் மிஷன் இம்பாசிபிள் ஆகிய பாடல்களை லிடியன் ஒரே நேரத்தில் வாசித்தார். இதை கேட்டு அங்கு இருந்த வெளிநாட்டு வீரர் ஒருவர் அப்படியே கைகளை பிடித்துக்கொண்டு வியந்து போய் பார்த்தார். இன்னொருவர் வியப்பில் ஆழ்ந்து போய் கத்தி பாராட்டினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications