ஏற்கெனவே இழந்தது அதிகம்.. இதற்கு மேலும் "இந்தி" யா? தாங்குமா இந்தியா?- வைரமுத்து ட்வீட்
சென்னை: இதற்கு மேலும் இந்தி மொழியா? தாங்குமா இந்தியா என கவிஞர் வைரமுத்து தனது ட்வீட்டில் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் வடக்கே வாழப்போன தமிழர்
இந்தி கற்கலாம்
தெற்கே வாழவரும் வடவர்
தமிழ் கற்கலாம்
மொழி என்பது
தேவை சார்ந்ததே தவிர
திணிப்பு சார்ந்ததல்ல
வடமொழி ஆதிக்கத்தால்
நாங்கள் இழந்த நிலவியலும் வாழ்வியலும் அதிகம்
இதற்குமேலும் இந்தியா?
தாங்குமா இந்தியா?
#HindiImposition

ட்வீட்டிற்கு ஆதரவு
வைரமுத்துவின் ட்வீட்டிற்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதில் இந்தியை தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்களில் மட்டும் ஆங்கிலத்தை அலுவல் மொழியில் இருந்து நீக்கி விடலாம்...! மற்ற மொழிகளை தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்க நினைப்பவர்களை ஆட்சியில் இருந்து நீக்கி விடலாம்...!! என்கிறார் இந்த வலைஞர்.

அமித்ஷா
நாடாளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 37 ஆவது கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அவர் கூறுகையில் ஆங்கில மொழிக்கு பதிலாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும். உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல.. சர்வதேச மொழியான ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும். அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது.

வெவ்வேறு மொழிகள்
வெவ்வேறு மொழிகளை பேசும் மாநிலங்களிலுள்ள மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் போது அது இந்திய மொழியில் இருக்க வேண்டும். இந்தி மொழியின் முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு தென் மாநிலத்தவர்கள் கண்டனம் தெரிவித்தனர். கர்நாடகாவில் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி, மதுரை எம்பி சு வெங்கடேசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டேக்கும் வைரலாகிறது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications