சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போ புயலே போய்விடு- பாமர உடல்களை பட்டம் விடாமல் சுகமாய் கடந்துவிடு சுவாசமாகி விடு- கவிஞர் வைரமுத்து

Google Oneindia Tamil News

சென்னை: போ புயலே போய்விடு , பாமர உடல்களை பட்டம் விடாமல் சுகமாய் கடந்து விடு சுவாசமாகி விடு என கவிஞர் வைரமுத்து நிவர் புயல் குறித்து கவிதை எழுதியுள்ளார்.

Recommended Video

    'போ புயலே போய்விடு.. பாமர உடல்களை பட்டம் விடாமல் சுகமாய் கடந்துவிடு சுவாசமாகி விடு' - கவிஞர் வைரமுத்து கவிதை

    தமிழகத்திற்கான நிவர் புயல், கடலூரை நோக்கி மணிக்கு 7 கி.மீ, வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் நேற்று முதல் சென்னை, கடலூர், புதுவை, சிதம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    இந்த புயல் அதி தீவிர புயலாக மாறி வருகிறது. இது இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் கரையை கடக்கும் போது 145 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.

    ட்விட்டர் பக்கம்

    ட்விட்டர் பக்கம்

    இந்த நிலையில் இந்த புயல் குறித்தும் எந்த சேதத்தையும் ஏற்படுத்தாமல் போவது குறித்தும் கவிஞர் வைரமுத்து கவிதை எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கையில்,

    வைரமுத்து கவிதை
    போ புயலே

    போ புயலே
    போய்விடு

    பச்சைமரம் பெயர்த்துப்
    பல் துலக்காமல்

    வேய்ந்தவை பிரித்து
    விசிறிக் கொள்ளாமல்

    குழந்தையர் கவர்ந்து
    கோலியாடாமல்

    பாமர உடல்களைப்
    பட்டம் விடாமல்

    சுகமாய்க் கடந்துவிடு
    சுவாசமாகி விடு

    ஏழையரின்
    பெருமூச்சை விடவா நீ
    பெருவீச்சு வீசுவாய்?
    #NivarCyclone #Nivar

    பாராட்டு

    இந்த கவிதை வைரலாகி வரும் நிலையில் இதை எல்லோரும் பாராட்டி வருகிறார்கள். அப்பா உங்கள் கவிதை அருமை இதை வாசித்து விட்டாவது, நிவர் நம்மை புயலாக தாக்காமல் தென்றலாய் தீண்டிவிட்டு செல்லட்டும் . போதும் கஜா புயலால் கோரத்தாண்டவம் ஆடியது போதும் . இதற்கு மேல் சேதம் ஏற்பட்டால் தாங்க எங்களிடம் மனவலிமையும் இல்லை பொருள் ஈட்ட வழியும் இல்லை என்கிறார் இந்த வலைஞர்.

    கடந்து போ சீக்கிரம்

    புயலும் இடம்பெயர,
    புருவம் இமைநகர,
    புதினம் மழைவரைய,
    புதிதாய் மனம்நகர,

    காத்திருக்கிறது மழை...
    கடந்துபோ சீக்கிரம்...

    பெருமூச்சு

    அபாரம். கவிப்பேரரசு அவர்களே.

    ஏழையரின் பெருமூச்சைவிடவா
    நீ பெருவீச்சு வீசுவாய்

    English summary
    Lyricist Vairamuthu writes a poem for Cyclone Nivar. Netisans praises him for the poetry.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X