சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொடநாடு விவகாரம் பற்றி பிரச்சாரம் செய்வதை ஸ்டாலின் தவிர்க்க வேண்டும்.. சென்னை ஹைகோர்ட் அறிவுரை

கொடநாடு எஸ்டேட் விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் கூறியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Kodanadu News: கொடநாடு பற்றி பிரச்சாரம் செய்வதை ஸ்டாலின் தவிர்க்க வேண்டும்: உயர்நீதிமன்றம்- வீடியோ

    சென்னை: கொடநாடு எஸ்டேட் விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ஸ்டாலினுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற மர்ம கொலைகள் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் சில முக்கிய ஆவணங்களை வெளியிட்டார், பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இது தமிழக அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த பிரச்சனை தற்போது தமிழக தேர்தல் களத்தில் முக்கிய இடம் பிடித்து உள்ளது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதுகுறித்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.

    கார்த்தி சிதம்பரத்துக்கு தகுதி இருக்கு! ஆனால் ஹெச் ராஜாவுக்கு? ஸ்டாலின் கடும் விமர்சனம் கார்த்தி சிதம்பரத்துக்கு தகுதி இருக்கு! ஆனால் ஹெச் ராஜாவுக்கு? ஸ்டாலின் கடும் விமர்சனம்

    அவதூறு வழக்கு

    அவதூறு வழக்கு

    இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், கொடநாடு எஸ்டேட் வழக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருக்கிறது என்று குற்றஞ்சாட்டி இருந்தார். இதனால் தமிழக அரசு ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கும் நிலுவையில் உள்ளது.

    மீண்டும் வழக்கு

    மீண்டும் வழக்கு

    ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து கொடநாடு எஸ்டேட் வழக்கு குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நேரடியாக ஸ்டாலின் புகார்களை பிரச்சாரத்தில் அடுக்கினார். இதனால் தமிழக அரசு ஸ்டாலினின் பிரச்சாரத்திற்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடுத்தது.

    என்ன சொன்னது

    என்ன சொன்னது

    இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இந்த வழக்கில் சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும், கொடநாடு விவகாரம் குறித்து ஸ்டாலின் பேசுவதை தவிர்க்க வேண்டும், கொடநாடு அவதூறு வழக்கு நிலுவையில் இருப்பதால் ஸ்டாலின் பேசுவதை தவிர்க்கலாம், என்று சென்னை ஹைகோர்ட் கூறியுள்ளது.

    ஹைகோர்ட் நோட்டீஸ்

    ஹைகோர்ட் நோட்டீஸ்

    ஆனால் இதை அறிவுரை போலவே சென்னை ஹைகோர்ட் கூறி இருக்கிறது. முழுமையாக ஸ்டாலினின் பேச்சுக்கு தடை விதிக்கவில்லை. அதேபோல் இதில் ஸ்டாலின் தனது கருத்தை பதிவு செய்ய வேண்டும். கொடநாடு விவகாரம் பற்றி தொடர்ந்து பிரச்சாரம் செய்வது ஏன் என்று விளக்க வேண்டும். தமிழக அரசின் மனு குறித்து மு.க.ஸ்டாலின் ஏப்.3ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    English summary
    M K Stalin has to answer about his speeches on the Kodanadu case in his campaigns: Madras High Court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X