அதிரடி காட்டும் டிடிவி.. களத்தில் நிற்கும் ஸ்டாலின்.. மாஸ் வேகத்தில் கமல்ஹாசன்.. கடும் போட்டி!
லோக் சபா தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் தலைகள் எல்லோரும் கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்தித்து பேசி வருகிறார்கள்.
சென்னை: லோக் சபா தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் தலைகள் எல்லோரும் கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்தித்து பேசி வருகிறார்கள்.
லோக் சபா தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் எல்லாம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. வடமாநிலங்களில் எல்லா கட்சிகளும் கூட்டணிக்காக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
மாறாக தமிழகத்தில் உள்ள கட்சிகள் மக்களை நேரில் சென்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. டிடிவி தினகரன், மு.க ஸ்டாலின், கமல்ஹாசன் ஆகியோர் இதில் முன்னிலையில் இருக்கிறார்கள்.

மு.க ஸ்டாலின்
புத்தாண்டில் இருந்தே அரசியல் களத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தீவிரமாக செயலாற்றி வருகிறார் என்றுதான் கூற வேண்டும். கடந்த 3ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய கிராம சபை கூட்டத்தை தொடங்கினார். அப்போது தொடங்கிய கூட்டம் ஏப்ரல் தொடக்கம் வரை நடக்கும் என்று கூறப்படுகிறது. திமுக சார்பில் 12,617 ஊராட்சிகளில் ஊராட்சி சபை கூட்டத்தை நடத்த உள்ளனர்.

கமல்ஹாசன் கூட்டம்
முதன் முதலாக இந்த கூட்டத்தை தொடங்கி தீவிரமாக அரசியல் களத்தில் பரபரப்பானவர் கமல்ஹாசன்தான். மக்கள் நீதி மய்யம் சார்பாக இவர் கடந்த இரண்டு மாதமாக கூட்டம் நடத்தி வருகிறார். தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த கிராம சபை கூட்டங்களால் இவருக்கு ஆதரவு அதிகம் ஆகியுள்ளது என்றும் கூறுகிறார்கள்.

டிடிடி தினகரன் கூட்டம்
அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிடி தினகரனும் தீவிரமாக தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார். இவர் கிராம சபை கூட்டம் போல நடத்தாமல், பொதுக்கூட்டம் போல நகராட்சிகளில் நடத்தி வருகிறார். பெரிய அளவில் கூட்டம் கூட்டுவதை விருப்பும் இவர் இன்னும் சில நாட்களில் பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளார். தென் மாநிலங்களில் இருந்து பேரணியை தொடங்க உள்ளார் என்கிறார்கள்.

மூன்று பேர்
இவர்கள் மூன்று பேரும் நடத்தும் கூட்டத்திற்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முக்கியமாக ஸ்டாலின் - டிடிவி தினகரன் இடையே இந்த கூட்டங்கள் காரணமாக நேரடி போட்டி நிலவி உள்ளது. லோக் சபா தேர்தல் களத்தில் தமிழகத்தில் யாருக்கு இடையே அதிக போட்டி இருக்கும் என்பதை இது தெளிவாக காட்டியுள்ளது. முக்கியமாக கமல்ஹாசனுக்கு இதனால் அதிக அளவில் கூட்டம் கூடி வருகிறது.

கற்றுக்கொள்ள வேண்டும்
அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் இவர்களை போல இன்னும் முழுதாக களத்தில் இறங்கவில்லை. இவர்கள் மூவரும் நடத்தும் கூட்டம் தேர்தல் நேரத்தில் இவர்களுக்கு பெரிய அளவில் உதவும் என்று கூறுகிறார்கள். லோக் சபா தேர்தலுடன் 20 சட்டமன்ற தொகுதிக்கான பொதுத்தேர்தலும் நடக்க வாய்ப்புள்ளதால், இவர்கள் நடத்தும் இந்த சந்திப்பு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications