ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி- முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
சென்னை: உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழை திரைப்படம் என முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இந்த படம் மாரி செல்வராஜ் எடுத்த திரைப்படம் ஆகும்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் #வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி @mari_selvaraj அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள்.

பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி! பசிக் கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்!
தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும்
@mari_selvaraj அவர்களுக்கு மீண்டும் வாழ்த்துகள்! இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க ஸ்டாலின், அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு மைக்ரோசாப்ட், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களை ஸ்டாலின் பார்வையிட்டார்.

சான்பிரான்சிஸ்கோவில் ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசர்கள் உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ 400 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன.
அது போல் தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. அது போல் அவர் ஜாகுவாரின் தானியங்கி காரிலும் முதல்வர் பயணம் செய்தார். 17 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.
வாழை திரைப்படத்தில் நிகிலா, விமல், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் ஓடிடியிலும் ரிலீஸாகிறது. பரியேறும் பெருமாள் எனும் படைப்பை கொடுத்து அனைவரையும் அதிர்ச்சியில் அழ வைத்தவர் மாரி செல்வராஜ். இவர் தனுஷை வைத்து கர்ணன், உதயநிதியை வைத்து மாமன்னன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
வாழை திரைப்படம் கடந்த 23 ஆம் தேதி அன்று திரைக்கு வந்தது. அதற்கு முன்னதாக சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்களுக்கென ப்ரிவியூ ஷோ போட்டு காட்டப்பட்டது. அப்போது இயக்குநர் பாலா கண்கலங்கினார், சூரி, தங்கதுரை உள்ளிட்டோர் மாரியை கட்டி பிடித்து முத்தமிட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications