வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்?
சென்னை: அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தவர்களை ஸ்டாலின் கைவிடமாட்டார் என்பதற்கு இன்று அவர் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலே உதாரணம் என்கிறார்கள்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியாகிறது. மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியானது.

முதலில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பிறகு வேட்பாளர்களை முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் கூறுகையில், எங்கள் கூட்டணி மகா கூட்டணி. நாளை தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றார்.
இந்த நிலையில் போடி தொகுதியில் ஓபிஎஸ்ஸும் ஆலங்குளம் தொகுதியில் மனோஜ் பாண்டியனும், ஒரத்தாநாடு தொகுதியில் வைத்திலிங்கமும், பாப்பிரெட்டிப்பட்டியில் பழனியப்பனும், பெருந்துறையில் தோப்பு வெங்கடாசலமும் போட்டியிடுகிறார்கள்.
இவர்கள் 5 பேரும் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்கள். இவர்களில் பழனியப்பன், அதிமுகவில் இருந்து, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், டிடிவி தினகரன் அணியில் அமமுகவில் செயல்பட்டார். பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு அமமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம், 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தலில் எம்எல்ஏவாக வென்றார். கடந்த 2021 ஆம் ஆண்டு வெங்கடாசலத்திற்கு சீட் கொடுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஓபிஎஸ் உள்ளிட்டோர் அண்மையில் திமுகவில் இணைந்தனர். இவர்களும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு தனி அணியாக செயல்பட்டு வந்த நிலையில் திமுகவில் இணைந்தனர். இவர்களுக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரத்தநாடு தொகுதியை கேட்டு பெற திமுக நிர்வாகி சந்திரசேகரனின் மகன் நரேந்திரன் என்ற மருத்துவர் முயற்சித்ததால் தனக்கு சீட் கிடைக்காதோ என வைத்திலிங்கம் களத்தில் இருந்த நிலையில் அவருக்கு தற்போது சீட் கொடுக்கப்பட்டுவிட்டது.
எனினும் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மைத்ரேயனுக்கு சீட் வழங்கப்படவில்லை. அது போல் 28 அமைச்சர்களுக்கு மீண்டும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பொன்முடி, காந்தியின் மகன்கள் கவுதம சிகாமணி, வினோஜ் காந்தி ஆகியோருக்கு சீட் வழங்கப்பட்டது.
எனவே மாற்றுக் கட்சியில் இருந்து திமுகவில் இணைந்தவர்களை எப்போதுமே அக்கட்சி அரவணைக்கும். அந்த வகையில் எ.வ.வேலு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன், முத்துசாமி, சேகர்பாபு, செந்தில் பாலாஜி, ராஜகண்ணப்பன், தங்கதமிழ்ச் செல்வன் உள்ளிட்டோருக்கு திமுகவில் பதவி, அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications