மதுரையில் மோடி நடத்திய இரவு நேர "மீட்டிங்".. காலையில் வந்த போன்.. ரெய்டு பற்றி ஸ்டாலின் பரபர பேச்சு!
சென்னை: சபரீசன் வீட்டில் நடக்கும் ஐடி ரெய்டு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இந்த ரெய்டு தொடார்பாக பிரதமர் மோடி நேற்று மீட்டிங் நடத்தியதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் 3 நாட்களே உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் திமுகவினர் நிர்வாகிகள் வீடுகளில் அடுத்தடுத்து ஐடி ரெய்டு நடந்து வருகிறது.
சென்னையில் உள்ள ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்து வருகிறது. அதோடு அண்ணா நகர் திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக் வீட்டிலும் சோதனை நடக்கிறது.

ஸ்டாலின்
இந்த ஐடி ரெய்டு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அரியலூரில் பிரச்சாரத்தில் குறிப்பிட்டார். அதில், காலையில்தான் எனக்கு ரெய்டு குறித்து போன் வந்தது. காரில் பிரச்சாரத்திற்கு வரும் போது ரெய்டு செய்தி வந்தது. 30 அதிகாரிகள் என் மகள் வீட்டில் ரெய்டு செய்து கொண்டு இருக்கிறார்கள்.

ரெய்டு
100 போலீஸ் அதிகாரிகள் அங்கே இருக்கிறார்கள். திமுகவை எப்படியாவது மிரட்டி விடலாம் என்று நினைக்கிறார்கள். ஒன்று மட்டும் மோடிக்கு சொல்கிறேன்; இது திமுக; நான் கலைஞரின் மகன். சலசலப்புக்கு எல்லாம் நான் அஞ்சி ஒடுங்கிவிட மாட்டேன்.

மதுரை
எவ்வளவு ரெய்டு வேணும்னா நடத்துங்க மதுரைக்கு நேற்று இரவே மோடி வந்துவிட்டார். மதுரைக்கு வந்தவருக்கு தமிழக நிலவரம் தெரிந்துள்ளது. தேர்தலில் தோல்வி அடைய போகிறோம் என்பது தெரிந்துள்ளது.

வெல்லும்
திமுகதான் வெல்ல போகிறது என்று அவருக்கு தெரிந்துவிட்டது. இதனால் எதாவது செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். திமுகவை மிரட்ட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார் மோடி. நேற்று இரவு இதற்காக மோடி மீட்டிங் போட்டுள்ளார்.

மீட்டிங்
நேற்று இரவு அதிகாரிகளை அழைத்து மீட்டிங் போட்டு, திமுகவினர் வீட்டில் சோதனை நடத்தும் முடிவை எடுத்துள்ளனர். இதை பார்த்து பயப்படுவோம் என்று நினைக்க வேண்டும். நீங்க ரெய்டு பண்ண பண்ண நாங்க உயர்ந்து கொண்டே இருப்போம் என்றது திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications