Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலினின் "நேஷனல்" பிளான்.. முதல் ஆளாக முட்டுக்கட்டை போட்ட மம்தா.. தளபதி vs தீதி.. மோதலா?

காங்கிரஸ் அல்லாத கூட்டணிக்கு விடுக்கும் வாதங்களை நிராகரிக்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.

Subscribe to Oneindia Tamil

சென்னை; சென்னையில் தனது பிறந்தநாள் விழாவின் போது முதல்வர் ஸ்டாலின் பேசிய சில விஷயங்களுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசி இருக்கிறார். அவரின் இந்த பேச்சு ஸ்டாலினின் தேசிய பிளானுக்கு போடப்பட்ட முதல் முட்டுக்கட்டையாக பார்க்கப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழா நேற்று முதல்நாள் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு முன் பேசிய பரூக் அப்துல்லா.. முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்கிறார். பாஜகவை கட்டுப்படுத்த அவரை போன்ற ஒருவர் தேசிய அரசியலுக்கு தேவை.

தேசிய அரசியல்

தேசிய அரசியல்

தேசிய அரசியலில் அவர் இருந்தால் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இதனால் ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வர வேண்டும் என்று பரூக் அப்துல்லா பேசி இருந்தார். இதையடுத்து தனது பிறந்தநாள் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகாலமாக வெற்றிபெற்றதற்கு ஒற்றுமை தான் காரணம். இந்த ஒற்றுமை தேசிய அளவில் இருக்க வேண்டும். தமிழ்நாட்டை போல் ஒற்றுமையான கூட்டணியை தேசிய அளவில் அமைக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டாலே வெற்றி நிச்சயம். அதுதான் இப்போது முக்கியம். காங்கிரஸ் அல்லாத கூட்டணிக்கு விடுக்கும் வாதங்களை நிராகரிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் விட்டுக்கொடுத்து பாஜகவுக்கு எதிராக ஒன்றுசேர வேண்டும். காங்கிரஸ் இல்லாமல் கூட்டணி அமைக்க கூடாது. அப்படியே அமைத்தாலும் அது கரை சேராது. தேர்தலுக்கு பின் கூட்டணி என்பதும் நடைமுறைக்கு சரியாக இருக்காது.

தேர்தல் கூட்டணி

தேர்தல் கூட்டணி

தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைக்க வேண்டும். காங்கிரஸ் அல்லாத கூட்டணிக்கு விடுக்கும் வாதங்களை நிராகரிக்க வேண்டும். 2024ல் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட யார் ஆட்சியமைக்க கூடாது என்பதே முக்கியம் என்று மு.க.ஸ்டாலின் பேசி இருந்தார். அதோடு விடாமல் முதல்வர் ஸ்டாலின் நேற்று பேசுகையில்.. தான் ஏற்கனவே தேசிய அரசியலுக்கு வந்துவிட்டதாகவும், தேசிய அரசியலில்தான் தான் இருப்பதாகவும் பேசி இருந்தார். இந்த நிலையில்தான் தேசிய அளவில் காங்கிரசை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்ற ஸ்டாலினின் பிளானுக்கு எதிராக தற்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசி இருக்கிறார்.

பாஜக

பாஜக

பாஜகவிற்கு எதிராக இருக்கும் மமதா.. காங்கிரஸ் கட்சியுடன் மனஸ்தாபத்தில் இருக்கிறார். முக்கியமாக தேசிய கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை தாங்க கூடாது என்பதிலும் மம்தா உறுதியாக இருக்கிறார். இதனால் அவர் காங்கிரசை பெரிதாக ஆதரிப்பது இல்லை. ஸ்டாலினுடன் காங்கிரஸ் நெருக்கமாக இருப்பதாலும் ஸ்டாலினுடமும் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கத்தை தவிர்த்து வருகிறார் மம்தா. கடந்த இரண்டு முறையும் முதல்வரின் பிறந்தநாள் விழாவிற்கு மம்தா வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் தேசிய அளவில் காங்கிரசை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்ற ஸ்டாலினின் பிளானுக்கு எதிராக தற்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசி இருக்கிறார்.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

நேற்று பேசிய மம்தா.. லோக்சபா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனியாக போட்டியிடும். நாங்கள் காங்கிரசுடன் கூட்டணி வைக்காமல் மக்களுடன் கூட்டணி வைப்போம். காங்கிரஸ், பாஜக எல்லாம் ஒன்றுதான். அதனால் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம். கம்யுனிஸ்டுகளுடன் காங்கிரஸ் நெருக்கமாக இருக்கிறது. அப்படிப்பட்ட காங்கிரசுடன் நாங்கள் எப்படி நெருக்கமாக இருப்போம். நேற்று மேற்கு வங்கத்தில் சகார்திக்கினி தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் திரினாமுலை வீழ்த்தி காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கூட்டணி வேட்பாளர் காங்கிரசின் பைரன் வென்றார். அவரின் இந்த வெற்றி காரணமாக கடுப்பான மம்தா காங்கிரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதான் தற்போது காங்கிரசை மம்தா எதிர்க்க காரணம் என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+