கொடநாடு எஸ்டேட் கொலை.. ஆளுநரை நாளை சந்திக்கிறார் ஸ்டாலின்.. ஆதாரத்துடன் முறையிட முடிவு!
கொடநாடு எஸ்டேட் கொலை தொடர்பாக நாளை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து முறையிட போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: கொடநாடு எஸ்டேட் கொலை தொடர்பாக நாளை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து முறையிட போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற மர்மக் கொலைகளின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்த இரண்டு நாட்களுக்கு முன் தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் சில முக்கிய ஆவணங்களை வெளியிட்டார். இதுகுறித்து ஆவணப்படமும் அவர் வெளியிட்டார்.
இதில் மேத்யூஸ் சாமுவேல் தமிழக முதல்வரை நேரடியாக குற்றஞ்சாட்டி இருந்தார். தற்போது இந்த கொலை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.

ஸ்டாலின் பேட்டி
ஸ்டாலின் தனது பேட்டியில், கொடநாடு விவகாரத்தை வெளியிட முடியாத அளவுக்கு தமிழக ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன. கொடநாடு விவகாரத்தில் எந்த பதிலையும் தராத முதல்வர், வழக்கு மட்டுமே நடப்பதாக கூறுகிறார். ஒரு கொலைக்குற்றவாளி முதல்வராக இருப்பது தமிழ்நாட்டில்தான் என பத்திரிகையாளர் மேத்யூ கூறியுள்ளார்; இதைவிட அசிங்கம் தமிழகத்திற்கு எதுவும் இல்லை

ஆளுநர் சந்திப்பு
கொடநாடு விவகாரம் தொடர்பாக நாளை ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து முறையிட உள்ளோம். இதற்காக நேரம் கேட்டு இருக்கிறோம். நாளை திமுகவினர் சார்பாக சென்று ஆளுனரிடம் ஆதாரங்களுடன் முறையிடுவோம்.

குடியரசுத் தலைவர்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடமும் முறையிட உள்ளோம். விரைவில் இதற்காக நேரம் கேட்க இருக்கிறோம். இது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும். கொடநாடு விவகாரத்தில் சிறப்பு விசாரணை ஆணையத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும்

நீதி விசாரணைக்கு தயாரா?
தமிழக முதல்வர் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஆனால் அதற்கு அவர் தயாராக இல்லை. அந்த அளவிற்கு அளவிற்கு அவருக்கு தைரியம் இல்லை. முதல்வர் தவறு செய்யவில்லை என்றால், ''இந்த வழக்கில் குற்றத்தை நிரூபித்தால் பதவி விலக தயார்'' என்று சொல்ல தயாரா?, என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications